யாழில் இரவோடு இரவாக மறைந்த வள்ளுவர் சிலை….?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்.நகரின் சத்திரச்சந்தியில் இருந்து அகற்றப்பட்ட புராதன வள்ளுவர் சிலைக்கு என்ன நடந்தது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி இரவு 8மணியளவில் வீதி அகலிப்பு மற்றும் வீதி சமிக்ஞை விளக்குகள் அமைப்பதற்காகவும் குறித்த வள்ளுவர் சிலை மக்களின் கண்ணுக்குப் படாமல் இரவோடு இராவாக அகற்றப்பட்டது. எனினும் அகற்றப்பட்ட இந்த வள்ளுவர் சிலை நகரின் முற்றவெளியில் வைக்கப்படும் என்று அப்போதைய மாநகராட்சியினரால் தெரிவிக்கப்பட்டது.
எனினும்’ இந்தச் சிலை அகற்றப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்தும் நகரின் எந்தப் பகுதியிலும் குறித்த வள்ளுவர் சிலை வைக்கப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த வள்ளுவர் சிலை குறித்த விவகாரம் எனக்குத் தெரியாது.வள்ளுவர் சிலையை நகரின் பிறிதொரு இடத்தில் வைப்பதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது என்று அறிந்தேன்.எனினும் குறித்த வள்ளுவர் சிலை எங்கே உள்ளது என்பது எனக்குத் தெரியாது.எனினும் வள்ளுவர் சிலை விவகாரத்துக்கு விரைவில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.valluve
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila