கடற்படையினரால் 18க்கு முன் கைப்பற்றப்படும் முள்ளிவாய்க்கால்

முல்லைத்தீவு வாட்டுவாகள் கடற்படை முகாமில் இருந்து முள்ளிவாய்க்கள் நோக்கி பொதுமக்களின் காணிகளை சுற்றி நிரந்தர வேலி அமைக்கும் நடவடிக்கையை கடந்த மாதம் கடற்கடையினர் ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் 20 படையினர் A1 காவலரனில் இருந்து A2 காவலரன் வரைக்கும் 300 மீற்றர் தூரத்தை ஆமைவேகத்தில் அடைத்து முடித்துள்ளனர்.

தற்பொழுது 200 படையினருக்கு மேல் இரண்டு நாற்களில் A2 காவலரனில் இருந்து A4 கவலரன் வரைக்கும் 500 மீற்றர் துரத்தை முயல் வேகத்தில் அடைத்து முடித்துள்ளனர்.

மீதி 1000 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள A7 கவலரன் நோக்கி அதிவேகமாக கடற்கடையினர் வேலையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொள்ளாத கடற்படையினர், இனி எதிர்ப்பை சந்திக்க வேண்டிவரலாம் என்னும் அச்சத்தின் காரணத்தினால்தான் அதிகமான படையினரை வேலைக்கு அமர்த்தி வேகமாக வேலையை முடித்துவிட எத்தனித்துள்ளனர்.

மே 18ஆம் திகதி அளவில் 4சதுர கிலேமீற்றர் தூரம் இலங்கை கடற்படை முகாமாக உறுதிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila