வடமாகாண சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாய்த்தர்க்கம்!


புதிய அரசியலமைப்பு தொடர்பில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட யோசனை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டமை தொடர்பில் வடமாகாணசபையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடுமையான தர்க்கம் இடம்பெற்றது.மாகாணசபையின் 52ஆம் அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டம் கடந்த 30ஆம் திகதி எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தனிடம் கையளிக்கப்படவிருந்தது.எனினும், குறித்த தினத்தில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் வராமையினால் அன்றைய தினம் அது கையளிக்கப்படவில்லை. இது தவறான ஒன்றாகும்.அத்துடன், அவை தலைவர் தலமையில் உறுப்பினர்கள் இதனை கையளித்திருக்க வேண்டும் எனவும் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக சபையில் இடம்பெற்ற விவாதத்தின்போதே ஆளுங்கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கடந்த 30ஆம் திகதி கையளிப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் முதலமைச்சர் சுகயீனம் காரணமாக கொழும்பில் தங்கியிருந்தமையினால் அது கைவிடப்பட்டது.அவ்வாறு கைவிடப்பட்டமையானது தவறான ஒன்று என மாகாணசபையின் எதிர்க் கட்சி தலைவர் சி.தவராசா கடிதம் ஒன்றை வடமாகாண சபையில் சமர்ப்பித்திருந்தார்.இக்கடிதம் மீதான விவாதத்தின் போது ஆளுங்கட்சியின் 4 உறுப்பினர்கள் கடுமையான வாத பிரதிவாதங்களை முன்வைத்ததனால் சபையில் குழப்பம் ஏற்பட்டது.குறித்த விடயம் தொடர்பாக ஆளுங்கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆனோல்ட் சபையில் கருத்து தெரிவிக்கையில்,கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் உறுப்பினர்களால் கேட்கப்பட்டிருந்த திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் அது உறுப்பினர்களுக்கு காண்பிக்கப்பட்டு இறுதியாக்கப்படும் என கூறப்பட்டது.எனினும், குறித்த யோசனை எமக்கு காண்பிக்கப்படாமல் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளமையானது மிகவும் தவறான ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.இதனையடுத்து ஆளும் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான கே.சயந்தன் உறுப்பினர்கள் கேட்ட திருத்தங்கள் செய்யப்பட்டு உறுப்பினர்களுக்கு காண்பிக்கப்பட்டாலேயே அது இறுதி செய்யப்படும்.இல்லாதுபோனால் அது அங்கீகரிக்க முடியாத ஒரு ஆவணமாகவே கருதவேண்டும். எனவே சபாநாயகருக்கு வழங்கப்பட்ட தீர்வு திட்ட யோசனைகள் அங்கீகரிக்கபடாத ஆவணமாக அறிவிக்கப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.மற்றும்மொரு ஆளும் கட்சி உறுப்பினரான அயூப் அஸ்மின் தாம் முன்வைத்த யோசனைகள் இடம்பெற்றனவா? என்பது தமக்கு தெரியாது.அவ்வாறு தாம் முன்வைத்த யோசனைகள் இடம்பெறாதவிடத்து அதற்கு தாம் வழங்கிய ஆதரவு விலக்கிக் கொள்ளப்படும் என சபையில் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கருத்து தெரிவித்த ஆளும் கட்சியின் மற்றும்மொரு உறுப்பினரான எஸ்.சுகிர்தனும் மேற்படி தீர்வு திட்ட யோசனை இறுதிப்படுத்தப்படாதது.எதிர்கட்சி ததலைவர் இரா.சம்பந்தனிடம் சமர்பிப்பது என தீர்மானிக்கப்பட்டதற்கு மாற்றாக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டமை பிழையானது. எனவே, இது திட்டமிட்டு செய்யப்பட்ட விடயம் என சுட்டிக்காட்டினர்.இந்நிலையில் மற்றய ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம் மற்றும் பிரதி அவை தலைவர் ம.அன்டனி ஜெயநாதன் ஆகியோரும், எதிர்கட்சி உறுப்பினரும் பேசுகையில் யாரிடம் கொடுக்கிறோம், எப்போது கொடுக்கிறோம் என்பது முக்கியமானது அல்ல நோக்கம் மட்டுமே முக்கியமானது.மேலும் வடமாகாணசபையின் தீர்வு திட்டம் தொடர்பாக தென்னிலங்கையில் சிங்கள இனவாதிகள் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு தீனி போடவேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.இதன் போது ஆளம்கட்சி உறுப்பினர் கனகரட்ணம் விந்தன் சபையில் பேசிக் கொண்டிருக்கையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களே குழப்பம் விளைவித்த நிலையில் தாம் வெளிநடப்பு செய்வதாக விந்தன் வெளியேற முயன்ற நிலையில் மற்றய சில உறுப்பினர்களால் மறிக்கப்பட்டார்.இந்நிலையில் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து தாம் எதிர்கட்சி தலைவரிடம் கையளிக்க முடியாமை தொடர்பாக எதிர்கட்சி தலைவரிடம் வருத்தம் தெரிவித்ததாகவும், தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே அவ்வாறு சபாநாயகரிடம் கையளித்ததாகவும் கூறினார்.தொடர்ந்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையில் பேசுகையில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பில் அல்லது திருகோணமலையில் வைத்து குறித்த யோசனையை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இந்நிலையில் ஆளுங்கட்சியின் 4 உறுப்பினர்கள் தொடர்ச்சியாக முதலமைச்சர் சபாநாயகரிடம் கையளித்தமை தற்செயலான சம்பவம் அல்ல, அது திட்டமிட்டு செய்யப்பட்டது. இது பேரவை உருவாக்கப்பட்டதை போன்று திடீரென திட்டமிட்டு செய்யப்பட்டது என கூறினர்.இது தொடர்பாக எதிர்கட்சி உறுப்பினர் எஸ்.தவநாதன் கருத்து தெரிவிக் கையில் ஆளுங்கட்சியில் 4 உறுப்பினர்கள் இந்த விடயத்தில் மறைமுக நிகழ்ச்சி நிரலில் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என குற்றம் சுமத்தியுள்ளார்.சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக ஆழுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் தொடர்ந்து நடைபெற்று பின்னர் எதிர்கட்சி தலைவரிடம் நிச்சயமாக 19ஆம் திகதிக்கு பின்னர் ஒரு திகதியில் கையளிக்கப்படும்.எதிர்கட்சி தலைவரிடம் கையளிப்பதற்கு இரு திகதிகள் குறிப்பிடப்பட்டு அவர் யாழ்ப்பாணம் வந்தபோதும் அவரிடம் கையளிக்க முடி யாமைக்கு பகிரங்க மன்னிப்பு கேட்பதுடன், அவரிடமும் மன்னிப்பு கேட்கப்படும்.இதேவேளை, எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளிப்பதற்கு முதலமைச்சர் தயக்கம் காட்டவில்லை. எனவும் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபைக்கு தெளிவுபடுத்தியதை தொடர்ந்து சபை அமைதிக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila