தரக்குறைவான பேச்சுக்களுடன் வடக்கு அமர்வில் கூச்சல் குழப்பம்


வடக்கு மாகாண சபையின் தீர்வு திட்ட முன்வரைபு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனிடம் முதலாவதாக வழங்கப்படாமல் சபாநாயகரிடம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் கையளிக்கப்பட்டமையால் நேற்றைய தினம் சபையில் தமிழரசு கட்சி, கூட்டமைப்பு அங்கத்துவ உறுப்பினர்களிடையே பெரும் மோதல் இடம்பெற்றது. தமிழ் மக்கள் பேரவையையும் இடையிடையே அங்கு தோன்றியது.
இதனால் நேற்றைய சபை தேனீர் இடைவேளையின் பின்னர் கூச்சல்கள் கத்தல்கள் மூலமே நடாத்தி செல்லப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 52 ஆவது அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இதன் போது, வடக்கு மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்ட வரைபு வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரினால் சபாநாயகரிடம் கையளிக்கபட்டது.
இதனை தூக்கிப்பிடித்த உறுப்பினர் ஆனல்ட் வடக்கு மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட தீர்வு திட்டம் செல்லுபடியற்றது என கூறி மீள பெறப்பட வேண்டும் என சபையில் கூறினார். இதற்கு உறுப்பினர்களான சுகிர்தன், அஸ்மின், சயந்தன் ஆகியோரும் ஆதரவு தெரிவித்து பேசினார்கள். இதனால் ஏனைய உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ் மக்கள் பேரவை
தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு சதி செய்வதற்காக எவ்வாறு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதோ, அதே போலதான் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் வடக்கு மாகாண சபையின் தீர்வு திட்ட வரைபு சமர்ப்பிக்காமல் சபாநாயகரிடம் முதலில் கையளிக்கப்பட்டுள்ளது. இதுவும் அதே போன்ற ஒரு சதி தான் என கூறிய உறுப்பினர் சயந்தன்,
வடக்கு மாகாண சபையில் தீர்வு திட்டம் உருவாக்கப்பட்டதன் பின்னர் முதலில் எதிர்க்கட்சி தலைவரிடமும் பின்னர் சபாநாயகர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் கையளிக்கப்படுவது, என்றே சபையில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் யாருக்கும் தெரியாமல் சபாநாயகரிடம் தீர்வு திட்டம் கையளிக்கப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவரிடம் வடக்கு மாகாண சபையின் தீர்வு திட்டம் கையளிக்கப்படும் நிகழ்வு பிற்போடப்பட்டமை அரசியல் ஆக்கிவிடக்கூடாது என்ற காரணத்திற்காக மறுதினமே எதிர்க்கட்சி தலைவரிடம் சமர்ப்பிக்கலாம் என அவைத்தலைவரிடம் நான் கோரினேன். கொழும்பில் கையளிக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு தெரியாது தான். ஆனால் இது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் நாம் தெளிவாக இருந்தோம். ஆகவே இதனை ஒரு பிரச்சனையாக எடுத்து விவாதிக்காமல், இன்னொரு நாள் எதிர்க்கட்சி தலைவரிடம் கையளிக்க முடியும் என உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இதன் பின்னர் அவைத்தலைவர் தனது கருத்துக்களை கூறி சபையை சமாதானப்படுத்தினார். வடக்கு மாகாண முதலமைச்சரும் தான் இந்த கையளிப்பு நிகழ்விற்கு வர முடியாமல் இருந்தமைக்கான காரணத்தை விளக்கி கூறி சம்பந்தனிடம் குறித்த தீர்வு திட்டம் கட்டாயம் சமர்ப்பிக்கப்படும் என உறுதியளித்தார்.
சம்பந்தன் தமிழினத்தின் விடிவெள்ளி
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தீர்வு திட்டம் சமர்ப்பிக்கப்படாமையால் அவர் எமார்ரமடைந்துள்ளார். என அடிக்கடி நேற்று உரையாற்றிய பெரும்பாலான உறுப்பினர்கள் குறிப்பிட்டு கொண்டே இருந்தனர். இதன் போது எழுந்த உறுப்பினர் சயந்தன், நாங்கள் தீர்வு திட்டத்தினை தலைவர் சம்பந்தனிடம் சமர்ப்பிக்காததனால்,
அவர் எமற்றமடையவில்லை நாங்கள் தான் ஏமாற்றம் அடைந்துள்ளோம். அவர் இங்கு வேறு ஒரு நிகழ்வுக்காக வருகை தரும் நிலையிலேயே அவரிடம் தீர்வு திட்டத்தை கையளிக்க கேட்ட்டிருந்தோம். ஆகவே நாங்கள் தான் ஏமாந்துல்லோம். அவர் ஏமாறவில்லை. சம்பந்தன் தமிழினத்தின் விடிவெள்ளியே தவிர மின்மினி பூச்சி அல்ல என தமிழ் கூறி அவையை தமிழால் மணக்க வைத்தார்.
சம்பந்தன் இனியாவது வரட்டும்
இதன் பின்னர் எழுந்த உறுப்பினர் அன்ரனி ஜெயநாதன், சம்பந்தன் அவர்கள் வடக்கிற்கு வருவது குறைவு, ஆகையால் தீர்வு திட்டத்தை கையளிக்கும் நிகழ்வை நாங்கள் இடைநிறுத்தி மீண்டும் ஒரு நாள் அதனை நடாத்துவதன் மூலம் மீண்டும் ஒருமுறை இங்கு அவர் வர முடியும்.
அவருக்கு நல்ல சொகுசு கார் வழங்கபட்டு உள்ளது. ஆகவே அவர் வரட்டும், என கூறி இங்குள்ளவர்கள் சிலர் சொந்த மூலையில் சிந்திக்காமல் கதைக்கின்றனர். என தன்பக்கம் இருந்த சிலருக்கு குத்தல் போட்டார். இதனை அடுத்து எழுந்த உறுப்பினர் சயந்தன், ஓம் எங்களுக்கு சொந்த மூளை இல்லைதான், எங்களுடைய தலைக்கு அறிவுதான் உள்ளது. உங்கள் மூளைகளை போல் ஒன்றும் இல்லாமல் இல்லை என குத்துக்கு குத்து போட்டார்.
வெளியேறிய விந்தன்
இவ்வாறு குத்தல்களும், கண் சிமிட்டுகளும் தொடர்ந்து கொண்டு இருக்க, எதோ கருத்து கூறுவதற்காக நீண்ட நேரத்திற்கு பின்னர் எழுந்து நின்ற உறுப்பினர் விந்தனை பேசவிடாது, ஆனல்ட் இடையிடயே குறுக்கிட்டு எதோ கூற, கடுப்படைந்த விந்தன் சபையை விட்டு வெளியேற முயன்றார். இதனால் அனலட் அடங்க, விந்தனை உள்ளே அமருமாறு அவைத்தலைவர் கோரினார்.
எனினும் வெளியேற முயன்ற விந்தனை ஆசுவாசப்படுத்தி உள்ளே அமர வைத்தார் லிங்கநாதன், சிறு இடைவேளையின் பின்னர் தனது கருத்து மிக்க உரையை தொடர்ந்தார் விந்தன். இவ்வாறு உறுப்பினர்களின் மோதல்கள் நடந்து கொண்டிருக்க எதிர்த்தரப்பிலிருந்து ஒரு கடும் குரல் ஆளுங்கட்சி இளைஞர்களை எச்சரித்தது.
இளைஞர்கள் குழப்புகின்றனர்.
அது யாரெண்டு பாத்தா.. தவநாதன், இங்கு உள்ள சிலர் தமது நோக்கங்களுக்காக அனைவரும் பேசும் போது எழுந்து நின்று குழப்பி கொண்டு உள்ளனர். இதை அவைத்தலைவரும் ஏற்று நடக்கின்றார். என்ற குற்றஞ்சாட்டினர். இந்த குற்றச்சாட்டினை ஆளும் தரப்பும் முன்வைத்தது.
சிலர் சொந்த மூளையில்லாமல் செயற்படுகின்றனர். என்னும் சிலர் சிலருடைய பின்னணியில் இயங்குகின்றனர். சர்வாதிகார நோக்கோடு இயங்குகின்றனர். என பல விடயங்கள் இளம் உறுப்பினர்கள் சிலர் மீது சுமத்தப்பட்டன. இதனை அவர்களும் அடிக்கடி நிரூபித்து வந்தனர்.
நான் செம்மறியல்ல
இவ்வாறு உறுப்பினர்களிடையே சுழன்று கொண்டிருந்த பந்து அவைத்தலைவரிடம் சென்றது. இதன் போது அவைத்தலைவர் சரியான முறையில் அவையை நடாத்தி செல்கின்றார். இல்லை. என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதோடு, வடக்கு மாகாண சபையின் தீர்வு திட்டத்திற்கு தாம் ஆதரவு அளிக்கப்போவதில்லை என கூற அவைத்தலைவர் தனது பாணியில் மிரட்ட தொடங்கினார்.
வடக்கு மாகாண சபையின் தீர்வு திட்ட வரைபு திருத்தப்பட்ட பின்னர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் அதனை தற்போது ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். நான் ஒண்டும் செம்மறியல்ல தனது ஆதங்கத்தை தன்னை பேசியே வெளிப்படுத்தினார் அவைத்தலைவர். அவைத்தலைவர் செம்மறி என கூறியதனை சபை குறிப்பேட்டிலிருந்து நீக்குமாறு உறுப்பினர் சயந்தன் நக்கலுடன் கூறினார்.
தமிழக மக்கள் கொந்தளிக்க வேண்டும்.
இடையில் சப்ஜெக்டை மாத்திய சிவாஜிலிங்கம், இந்தியாவின் உத்தர பிரதேசத்திற்கு செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எதிராக தமிழக மக்கள் கொந்தளிக்க வேண்டுமென தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட உறுப்பினர் சயந்தன்“உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்களை பேசி வன்முறைகளை ஏற்படுத்த வேண்டாம். முள்ளிவாய்க்காலில் மக்கள் மடியும் போதுஇ தமிழக மக்கள் கடல் தாண்டி வந்து எங்கள் மக்களை காப்பாற்றினார்களா? சுயஇலாப அரசியலில் அவர்கள் பேசுகின்றனர். ஆகவே சிவாஜிலிங்கம் சொன்ன விடயம் கன்சாட்டில் இருந்து நீக்கப்படவேண்டும்” என்றார். அதனை ஏற்றுக்கொண்ட சி.வி.கே.சிவஞானம், கன்சாட்டில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
ஜனாதிபதி என்றால் தப்பு! சம்பந்தன் என்றால் தப்பில்லை!
இதன்போது கருத்துக்கூறிய தவநாதன்,இதுவரைகாலமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி தொடர்பான அவதூறாக பல்வேறு விடயங்கள் இந்தச் சபையில் கதைக்கப்பட்டும் அவை கன்சாட்டில் இருந்து நீக்கப்படவில்லை. ஆனால்இ ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் செல்கின்றார் என்பதற்காக சிவாஜிலிங்கம் சொன்ன விடயத்தை கன்சாட்டில் இருந்து நீக்குகின்றீர்களா?” என கேட்டார்.
அதனை இலாவகமாக சமாளித்த அவைத்தலைவர் நீங்கள் நீக்குமாறு கோரினால் அந்தத் தருணங்களில் நீக்க வேண்டியவற்றை நீக்குவோம். மற்றப்படி எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார். இனிமேல் சுட்டிக்காட்டுங்கள் நாங்கள் நீக்குவோம் என அவைத்தலைவர் கூறினார்.
இவ்வாறு நேற்றைய அமர்வு உறுப்பினர்களின் மிரட்டல் தொனியுடனும், மூக்கை நேரடியாக தொடுவதற்கு தலையை சுற்றி தொட்டும், நேரத்தை வீணடித்தும், நக்கல் பம்பல்களுடனும், கண் சிமிட்டல்களுடனுமே சபை நடந்து முடிந்தது. இவர்களது இந்த நடவடிக்கைகளை பாடசாலை மாணவர்களும் பாரவையிட்டு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila