நாட்டில் தொடர்ந்து பெய்த கடும் மழையால் ஏற் பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ மையம், இந்த இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் 250 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ மையம் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறதாகவும் மத்திய மாகாணத்தில் உள்ள கேகாலையில் பல சடலங்களை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இச்சூழலில் சில பகுதிகளில் மழை வெள்ளம் வடிந்துவிட்டதால் மக்கள் வீடுகளுக்கு திரும்ப தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், மலையகத்தில் ஆங்காங்கே நிலச் சரிவு அபாயம் இருப்பதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் குறைவடைந்த நிலையிலும் பல பிரதேசங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
குறிப்பாக காவத்தை, நிவித்திகலை, கிரியெல்ல, கொலன்ன, எஹலியகொடை, குருவிட்ட, பலாங்கொடை, எலபாத்த ஆகிய நகரை அண்மித்த பகுதிகளில் நேற்று காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.
இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட லிந்துலை ஊவாக்கலை 3ஆம் இலக்க தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலம் கீழ் இறங்கியதால் குடியிருப்புகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினாலும் மண்சரிவு அபாயத்தின் காரணமாகவும் 12 குடும்பங்களை சேர்ந்த 57 பேர் இடம்பெயர்ந்து தோட்ட விளையாட்டு மைதானத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாரிய நிலச்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட கேகாலை மாவட்டத்திலுள்ள அரநாயக்க பிரதேசத்தில் நிலத்தில் புதையுண்டு காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணியில் இராணுவம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
இந்த பிரதேசத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியிலும் நிவாராண பணியிலும் 200க்கும் மேற்பட்ட இராணு வத்தினர் ஈடுபட்டுள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளரான பிரிகேடியர் ஜயநாத் வீரசூரிய தெரிவித்தார்.
இதுவரை, 5 பெண்கள் உட்பட 21 சடலங்களை இராணுவம் மீட்டுள்ளது. இதனைத்தவிர, காணாமல் போன 14 பேரு டையதாக இருக்கலாம் என கருதப்படும் சில உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இப்பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த பலரின் சடலம் நிலத்திற்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும், அவை கற்பாறைகளுக்கு அடியில் காணப்படுவதால், கற் பாறை உருண்டு பாரிய சேதம் ஏற்படலாமென்ற அச்சத்தில் அப்பகுதியில் மீட்புப் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, மீட்புப்பணிகளில் இருந்து விலக்கப்பட்ட இராணுவத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடு படுமாறு இராணுவத் தளபதி உத்தரவிட்டுள் ளார்.
நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்த மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 இலட்சத் துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள் ளமை குறிப்பிடத்தக்கது.