கட்டுக்கடங்காமல் ரவுடிகளிகளின் அடாவடித்தனம் தொடர்ந்து செல்வதாக பொது மக்களினால் விசனம் வெளி யிடப்படுகிறது. பருத்தித்துறையில் இருந்து ஆழியவளை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தை நாகர்கோவில் சந்தியில் மறித்த ரவுடிக்கும் பல் நடத்துநரை இழுத்து விழுத்தி தாக்கியதுடன் தட்டிக் கேட்ட இளைஞனையும் கொட்டன்களால் தாக்கியது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிய ளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.
பருத்தித்துறையிலிருந்து ஆழியவளை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மாலை 6 மணியளவில் நாகர்கோவில் சந்தியை நெருங்கிய போது சந்தியில் 20-25 வரையிலான இளைஞர் குழு ஒன்று படுத்திருந்தது.
பேருந்துச் சாரதி பேருந்தை நிறுத்திய போது கொட்டன்களுடன் பேருந்தின் இரு கதவுகள் ஊடாகவும் ஏறி உடுத் துறையைச் சேர்ந்தவர்கள் இருந்தால் இறங்குமாறு உரத்தக் குரலில் சத்தமிட்டது.
அவர்களை ஏன் இறங்கச் சொல்கிறீர்கள் எனக் கேட்ட நடத்துநரை பிடித்து இழுத்து வீழ்த்தி சேட்டைக் கிழித்ததுடன் தொலைபேசியையும் பறித்து எறிந்து அவரின் தங்கச் சங்கிலியையும் அறுத்து அட்டகாசம் புரிந்தனர்.
இதனை பேருந்துக்குள் இருந்து அவதானித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நடத்துநரை ஏன் அடிக்கிறீர்கள் எனக் கேட்ட போது அவரின் தலையில் கொட்டன்களால் தாக்கினர் அக் கும்பல். இதனால் அவர் மயங்கி விழுந்தார். வீழ்ந்தவரையும் சரமாரியாகத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தனையும் முடிய இரவு பேருந்தை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நிறுத்திய சாரதி மருதங்கேணிப் பொலிஸாருக்கு விடயத்தைக் கூறியதுடன் காயமடைந்த வரை மருதங்கேணி வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கி ருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவ்வளவு நடைபெற்றும் பொலிஸார் எதுவித நடவடிக் கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று சனிக்கிழமை காலையில் இருந்து வடமராட்சிக் கிழக்கிற்கான சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் தமது சேவையினை பகிஷ்கரிப்புச் செய்தன. தமக்கும் பேருந்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பில்லை என்பதால் பேருந்து சேவையில் ஈடுபடமுடியாது என அவர்கள் கூறினர்.
இது விடயம் புலனாய்வுப் பிரிவு மூலம் மேலிடத்திற்கு தெரியவரவே பொலிஸார் உடனடியாக தலையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நபரை பருத்தித்துறை வைத்தியசாலைக்குச் சென்று பொலிஸார் பார்வையிட்டதுடன் தனியார் பேருந்து சங்கத்தினருடனும் கலந்துரையாடினர்.
பிரதேச செயலர், பொலிஸார் இணைந்து தமக்கு எவ்வித இடையூறும் விளைவிக்கப்படாது என உறுதி மொழி கொடுக்கப்பட்டதாக தனியார் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நண்பகலிலிருந்து பேருந்து சேவை யில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்த அவர்கள் ஏதேனும் இடை யூறுகள் ஏற்பட்டால் பொலிஸாரும் பிரதேச செயலருமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறினர்.