தம்மைத் தாமே ஆளும் அதிகாரத்தை, வட மாகாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்க வேண்டுமென்றும், இதன்மூலம் அதிகாரப் பரவலாக்கல் வலிமை பெற்று, மக்களது பிரச்சினைகளை தீர்ப்பது இலகுவாக அமையுமென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். ஒற்றையாட்சிக்குள் தீர்வெனும் கொள்கையில் ஜனாதிபதி மைத்திரி செயற்பட்டாலும், ஐக்கிய தேசிய கட்சியானது, சமஷ்டியையே ஆதரிக்கின்றதென்ற ஒரு குற்றச்சாட்டையும் வாசுதேவ முன்வைத்துள்ளார். மக்களையும் நாட்டையும் பிரித்தாளும் தேவை இன்று ஐக்கிய தேசிய கட்சிக்கே உள்ளதென்றும் அவர் கூறியுள்ளார். எனினும், தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கதென குறிப்பிட்ட வாசுதேவ, வடக்கிற்கு தம்மை தாமே ஆளும் அதிகாரத்தை வழங்குவது சிறந்ததென வலியுறுத்தியுள்ளார்.
வடக்கிற்கு தம்மை தாமே ஆளும் அதிகாரத்தை வழங்குங்கள் : வாசுதேவ நாணயக்கார

Add Comments