அதிகாரிகளால் ஏமாற்றப்பட்ட ஜூலியனின் குடும்பம் : தந்தை கண்ணீர்


சாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரத்தில் கைதான ஜூலியனின் சகோதரிக்கு அழைப்பை மேற்கொண்ட செஞ்சிலுவை சங்க அதிகாரி ஒருவர், இன்றைய தினம் ஜூலியனை பார்க்க 2 ஆம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.



இதற்கமைய ஜீலியனின் சகோதரி மற்றும் தந்தை ஆகியோர் இன்று கொழும்பு 2 ஆம் மாடிக்குச் சென்ற போது, ஜீலியன் இங்கு இல்லை எனவும் அவரை விசாரணைக்காக வேறு இடத்திற்கு மாற்றியுள்ளோம் எனவும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட வருமாறும் அவர்கள் கூறியதாக ஜீலியனின் தந்தை தெரிவித்தார்.

அத்தோடு, ஜூலியன் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலோவில் தற்கொலை அங்கி வைத்திருந்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட எட்வேட் ஜூலியனை இதுவரை தாங்கள் பார்வையிடவில்லை எனவும் அவரது குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 29 ஆம் திகதி மார்ச் மாதம் சாவகச்சேரி பொலிஸார் கிளிநொச்சியில் வைத்து எட்வேட் ஜூலியன் கைது செய்யப்பட்டார்.இவர் கைது செய்யப்பட்டதில் இருந்து இவரது மனைவி வவுனியாவில் அமைந்துள்ள புலனாய்வு பிரிவினரில் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, ஜூலியனின் மனைவி சுகயீனமடைந்ததால் அவரை கொழும்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு சென்று பார்வையிடலாம் என்றும் தொலைபேசியில் தொடர்புகொண்ட செஞ்சிலுவைச் சங்க அதிகாரி தெரிவித்ததாக ஜூலியனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும், ஜூலியனின் மனைவி இருக்கும் வைத்தியசாலை தொடர்பான தகவலோ அல்லது பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தையோ அதிகாரிகள் வழங்க மறுத்துவிட்டதாகவும் ஜூலியனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஜூலியன் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக கொழும்பில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவரது தந்தை முறைப்பாடு ஒன்றை அண்மையில் பதிவு செய்திருந்தார்.
 எனினும் ஜூலியன் கைதுசெய்யப்பட்டு இரண்டு வாரங்களுக்கு பின்னரே அவரைக் கைது செய்தமைக்கான பற்றுச்சீட்டை பொலிஸார் வழங்கியுள்ளனர்.

மகனைப் பார்வையிடுவதற்காக இனறைய தினம் 2 ஆம் மாடிக்கு வந்த போதும் தமக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக ஜூலியனின் தந்தை தெரிவித்தார்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila