யாழ்ப்பாணம் நவாலி புனித பீற்றர் தேவாலய முன்றலில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நவாலியில் இடம்பெற்ற கோரத்தாக்குதலை அன்றைய தினம் வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர் நியாயப்படுத்தியிருந்தார்.
சந்திரிக்காவின் ஆட்சியில் இடம்பெற்ற இந்த நவாலி கோரத்தாக்குதல், போர்குற்றம் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளுக்கு அவர் தயாரா என நான் கேட்க விரும்புகின்றேன். அத்துடன், செம்மணி படுகொலைகளை விசாரணை செய்ய நீங்கள் தயாரா?’ எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்திருந்தனர்.
இதனையொட்டி, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட புலம்பெயர் தமிழ் மக்களினால் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கான நினைவு நாளானது மே மாதம் 18ம் திகதி உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கவுள்ளது. இந்தநிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் நேற்றுமுந்தினம்(வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர் பொன் ஐங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.