இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்


கடந்த அரசாங்கத்தைப் போன்று சமகால நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடரும் கைது நடவடிக்கையை கண்டித்து லண்டனில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.லண்டனின் WESTMINISTER பகுதியில் இன்று பிற்பகல் ஒரு மணி தொடக்கம் நான்கு மணி வரையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.இதன்போது இலங்கையில் நல்லாட்சியில் தொடரும் கைதுகளைக் கண்டித்தும், வெள்ளைவான் கடத்தலுக்கு எதிராகவும், தாயகப்பகுதியில் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரியும், தற்போது இலங்கையில் நிலவும் குழப்பமான சூழ்நிலையில் புலம்பெயர் தேசங்களில் இருக்கின்றவர்களை திருப்ப அனுப்ப வேண்டாம் என நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.இந்த விடயங்கள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila