ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் மஹிந்த காலம் மீண்டும் உருவெடுக்கும் : அசாத் சாலி
தற்போதைய அரசாங்கத்திலுள்ள அமைச்சரவையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சிக்காலத்தின் கொள்ளையர்களும் உள்ளனர் என மத்திய மாகாணத்தின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மஹிந்த காலத்தைப் போன்ற ஒரு நிலை, நாட்டில் மீண்டும் ஏற்படுமெனவும் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஊழல் மோசடி தொடர்பில் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட போதும், அரசாங்கம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு, மறைந்த அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் பெருமளவான சொத்துக்கள், கிழக்கு மாகாண முதலமைச்சரின் பெயரிலேயே உள்ளதென்றும், அது எவ்வாறு வந்ததென விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அசாத் சாலி மேலும் தெரிவித்தார்.
Related Post:
Add Comments