யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நடுநிலை நாளிதழ்களுள் ஒன்றான வலம்புரி? ?மஞ்சள்? பத்திரிக்கை என சான்றிதழ் வழங்கியுள்ளார் வடமாகாண சபையின் சுமந்திரன் ஆதரவுக்குழு உறுப்பினர் இமானுவேல் ஆனோல்ட். வடமாகாணசபையின் இன்றைய அமர்வின் போதே குறித்த பத்திரிகை சகிதம் வருகை தந்து இக்குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.
வடமாகாணசபையைப் புறந்தள்ளி கடந்த செவ்வாயன்று கூட்டப்பட்ட ஆளுநர் கூட்டத்தை பற்றி வலம்புரியும் இணையங்களில் பதிவுமே கூடிய அறிக்கையிடல்களைச் செய்து அம்பலப்படுத்தியிருந்தன. குறிப்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உட்பட 31 பேர் புறக்கணித்த இக்கூட்டத்தில் சுமந்திரன் அணியை சேர்ந்த கூட்டமைப்பின் எழுவரும் எதிர்கட்சி சார்பில் ஒருவருமே பங்கெடுத்திருந்தனர். பங்கெடுத்த சுமந்திரன் அணியினை சார்ந்தவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்தியதையடுத்தே வலம்புரி நாளிதழ் மீது இத்தரப்புக்கள் தாக்குதலைத் தொடுத்துள்ளன.
ஏற்கனவே காப்புறுதி நிறுவனமொன்றில் நடந்த பல மில்லியன் நிதி மோசடிகள் தொடர்பில் ஆனோல்ட் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுமுள்ளது.
ஏற்கனவே பதிவு இணையத்தளம் தொடர்பில் மாகாணசபையின் ஆளும் தரப்பை சேர்ந்த பலரும் தமது பொட்டுக்கேடுகளினை அம்பலப்படுத்தியமை தொடர்பில் சீற்றங்கொண்டு கருத்துக்களினை முன்வைத்துவருவது தெரிந்ததே.