13இற்கு உட்பட்டதாகவே தீர்வு – சமஷ்டி கிடையாது : இந்தியாவும் ஆதரவு!

maithri met modi

புதிய அரசியல் யாப்பில், 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு உட்பட்டதாகவே இனப்பிரச்சினைக்கான தீர்வு அமையும் என்றும், வடக்கு கிழக்கு இணைப்பிற்கோ சமஷ்டிக்கோ இடமில்லையென்றும் அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இந்திய அரசும் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டத்தினருடனும், இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரியவருகிறது. வடக்கு கிழக்கு இணைப்பிற்கு தென்னிலங்கையில் பாரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இந்தியா அதனை வலியுறுத்தாதென்றும் கூறப்படுகிறது. எனினும், இலங்கை இந்திய உடன்படிக்கை மூலம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வு ஏற்பட வேண்டுமென்பதில், இந்தியா அக்கறையாகவுள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் இந்திய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், காணி அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியதாகவும், எனினும் பொலிஸ் அதிகாரத்தை வழங்க மறுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் சமஷ்டி கோரிக்கையை முன்வைக்காமல், 13இற்கு உட்பட்ட தீர்வினை பெற்றுக்கொள்ள முடியுமென, கூட்டமைப்பின் தலைமைக்கு இந்தியா விளக்கியுள்ளதாகவும், இரு தரப்பினரையும் இவ்விடயத்தில் ஒரு நிலைப்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் இந்தியா செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற கும்பமேளா நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தமை, இதன் ஒரு அங்கம் எனக் குறிப்பிடப்படுகிறது. இவ்விடயம் குறித்த மேலதிக பேச்சுவார்த்தைக்காக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://athavansrilanka.com/?post_type=post&p=339305#sthash.JhiqAJ66.dpuf
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila