தங்காலை பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கியுடன் 10 தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மீட்டியாகொடை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அம்பாலங்கொடை பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் இவருக்கு எதிராக பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபர் ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளாமை குறிப்பிடத்தக்கது.