ஈழத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய சூழலில் மன்னார் மாவட்ட ஆயர் இல்லத்தினால் அத்துமீறி அமைக்கப்படும் மாதா திருச்சொரூபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மாவட்ட இந்து சமய ஆலயங்களின் பிரதிநிதிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் நேற்றைய தினம் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று காலை 9.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களின் மற்றும் இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். முன்னதாக ஆலயத்தின் முன்வாயிலில் இருந்து திருவாசகம் ஓதலுடன் ஆரம்பமாகிய கவனயீர்ப்பு பேரணி, பாலாவி தீர்த்தத்தை வந்தடைந்தது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினால் அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாத போதிலும் பொலிசார் பெருமளவில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்டு இருந்ததோடு, குறித்த மாதா சொரூபத்திற்கு பாதுகாப்பு வழங்கியதனையும் காண முடிந்தது. இதனால் அமைதிவழியிலான கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்த மக்கள் அச்சமடைந்திருந்தனர்.
திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் பாலாவி தீர்த்ததிற்கு அருகாமையில் மாந்தை சந்தியில் உள்ள காணி ஒன்றில், குறித்த மாதா சொரூபத்தினை ஆலயத்திற்கு எவ்வித அறிவித்தல்லும் வழங்காமல் திடீரென குறித்த மாதா சொரூபம் சிலரால் அங்கு வைக்கப்படுள்ளது. குறித்த சொரூபம் வைப்பதற்கு முன்னர் சிரமதானம் என்ற பெயரில் மக்களை அழைத்து,
காணியை துப்பரவு செய்துவிட்டு வேலி அடைக்க பயன்படுத்தப்படும் நான்கு தூண்களை நாட்டி அதற்கு மேல் மாதா சொரூபத்தினை அவசர அவசரமாக கம்பிகளால் வைத்து கட்டிவிட்டு சென்றுள்ளனர். சிலருடைய இந்த விசமத்தனமான நடவடிக்கையால் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தமக்குள்ளே முரண்பட ஆரம்பித்துள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரச்சனை இந்து கிறிஸ்தவ பிரச்சனை அல்ல எனவும், இது சிலருடைய சுய நல நோக்கங்களுக்காக இரு மதத்தினரயையும் தூண்டி விடுவதற்காக திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட வேலை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த இடத்தில் ஏற்கனவே லூர்த்து மாதா ஆலயம் இருக்கும் போது,
அதற்குள் மாதா சொரூபத்தை அமைக்காமல் பாலாவி தீர்த்த கரையோடு மடு மாதா சொரூபத்தை அமைப்பதற்கான நோக்கம் என்ன? என கேள்வியெழுப்பியுள்ள நேற்று கவனஈர்ப்பில் ஈடுபட்டிருந்த மக்கள், இந்து கிறிஸ்தவ மக்களை இதன் மூலம் மோத விட்டு குளிர் காயும் நபர்களை கிறிஸ்தவ தமிழ் சகோதரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைதி வழி கவனஈர்ப்பின் பின்னர் மன்னார் மாவட்ட இந்து கோவில்களின் பிரதிநிதிகளினால், குறித்த அத்து மீறல் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் ஆகியோருக்கு அறிக்கை கையளிப்பது என முடிவெடுக்கப்பட்டு மதியம் பன்னிரண்டு மணியளவில் கவனயீர்ப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதேவேளை குறித்த சொருபம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை 24 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.