வடமாகாணத்தில் பரவலாக படையினர் படைமுகாம்களை அமைப்பதற்கும், சிவில் பாதுகாப்பு படைக்கான பண்ணைகள் அமைப்பதற்குமாக பெருமளவு நிலத்தை தமக்கு வழங்குமாறு மாவட்டச் செயலகம், மற்றும் பிரதேச செயலகங்கள், காணி அமைச்சு ஆகியவற்றிடம் கோரிவரும் நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘வடமாகாணத்தில் படையினருடைய கட்டுப்பாட்டின் கீழ் மிக பெருமளவான நிலம் மக்களோ, அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ பார்க்காத, பார்க்ககூடாத இடங்களாக வைக்கப்பட்டிருக்கின்றன.
மேற்படி நிலங்களை தங்களுடைய தேவைகளுக்காக சட்டரீதியாக எடுத்துக் கொள்வதற்கு படையினர் நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு சட்ட ரீதியான உரித்து படையினருக்கு இல்லை. நிலம் சுவீகரிப்பு சட்டத்தின் படி பொது தேவைக்காகவே காணிகளை சுவீகரிப்பு செய்ய முடியும்.
ஆனால் படையினருக்கு முகாம் அமைப்பது பொது தேவையாக இருக்கப்போவதில்லை. படையினர் சட்டரீதியாக நிலங்களை சுவீகரிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் பொருத்தமற்றவை. என்பதுடன் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமருடன் நிச்சயம் பேச்சுவார்த்தை நடத்துவோம்.’ என்றும் கூறினார்.