கிளிநொச்சி உட்பட வன்னி மாவட்டங்களில் சி.எஸ்.டி இராணுவ அணி நடத்தும் முன்பள்ளிகளை விட்டு இராணுவம் வெளியேற வேண்டும் என வடக்கு மாகாண சபையில் தீர்மானம் ஒன்று நிறை வேற்றப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 55ஆவது அமர்வு நேற்றைய தினம் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம்
தலைமையில் நடை பெற்றது.இதன் போதே உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையால் மேற்படி தீர்மானம் முன் மொழியப்பட்டு நிறை வேற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி உட் பட வன்னி மாவட் டங்களில் சி.எஸ்.டி. என அழைக்கப்படும் இராணுவ அணியை சேர்ந்த படையினரால் சிறுவர் பாட சாலைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த சிறுவர் பாடசாலைகளில் பதினெட்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் கல்வி கற்று வரு கின்றார்கள்.
இலங்கை உட் பட உலகில் எந்த நாட்டிலுமே சிறுவர் பாடசாலைகளை இராணுவம் நடத்தியதாக வரலாற்று சான்றுகள் இல்லை. எனவே எமது குழந்தைகள் தாய் மொழியை சரியான முறையில் கற்கவும் தமிழர் பண்பாட்டு சமய விழுமியங்களை சிறு பராயத்திலிருந்தே கற்றுக்கொள்ளவும்,
இராணுவ கட்டுப் பாட்டுக்குள் இருந்து விடுபட்டு சிறார்கள் சுயமாக பழகவும், ஆசிரியர்கள் சுயமாக கற்பிக்கவும் மாகாணசபை முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிறைவேற்றப்படும் இந்த தீர்மானத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அறிவித்து உடனடியாக இராணுவ கட்டமைப்புக் குள்ளிருந்து விடுவிப்பதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சபை கோருகின்றது என்றவாறாக தனது பிரேரணையை அவர் முன்மொழிந்தார்.
இந்த பிரேரணை சபை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கும் அனுப்பி வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட் டது.
இதன் போது இந்த முன்பள்ளிகளை வடக்கு மாகாண சபை பொறுப்பு எடுக்காமல் அதற்குள் கை வைப்பது தவறு.
இதனை நம்பி பல ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்
இதனை உடனடியாக நிறுத்துவது ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலாகும்.
முன்பள்ளிகளை இராணுவம் நடத்துகின்ற போதிலும் அவர்கள் எந்த குற்ற செயல்களிலும் ஈடு படவில்லை.
இங்கு தான் எம்மவர்கள் கற்பிக்கின்றார்கள் குற்றச்செயல்களும் இடம்பெறுகின்றது.
ஆனால் இராணுவம் அவ்வாறு ஒன்றும் செய்யவில்லை என உறுப்பினர் அரியரத்தினம் குறித்த பிரே ரணையின் போது கருத்து கூறியிருந்தார்.