வடபுலத்துக் காணிகளை தென்பகுதிக்கு வழங்குவதோ!


எங்களிடம் நிலம் இருந்தால்தான் எதையும் நாம் செய்ய முடியும் என்றார் தந்தை செல்வ நாயகம்.

ஆனால் இன்று தமிழ் மக்களின் நிலங் களை  கபளீகரம் செய்வதிலேயே தென்பகுதித் தரப்புக்கள் மிகத் தீவிரமாக உள்ளன.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதை வேரறுப்பதற்காக சிங்களக் குடியேற்றங் களை வடக்கில் தாராளமாக ஏற்படுத்துவதில் அதிதீவிரம் காட்டப்படுகிறது.
குறிப்பாக வன்னிப் பகுதியில் அரச காணிகளை சிங்கள மக்களுக்கு வழங்குவதற்கான திட் டங்கள் மிக நுட்பமாக அரங்கேற்றப்படுகின்றன.

காணி அதிகாரத்தை மத்தியில் வைத்துக் கொண்டு வட பகுதியில் சிங்கள மக்களுக்குக் காணிகளை வழங்கி அவர்களை குடிய மர்த்தி விட்டால், 

கணிசமான சிங்களக் குடிசனம் வட பகுதி யில் நிலைகொண்டு விடும். இதனைச் செய்வ தனூடாக, சிங்கள மக்களுக்கான பாது காப்பை வழங்குவதற்கென இராணுவ முகாம் களை அமைத்தல் அல்லது ஏலவே இருக் கின்ற இராணுவ முகாம்களைத் தொடர்ந்தும் பேணிப்பாதுகாத்தல், வடக்கில் சிங்களப் பிரதி நிதித்துவத்தை ஏற்படுத்தல் என்பவற்றினூ டாக வட பகுதியில் இருக்கக்கூடிய தமிழ் இனப் பரம்பலை தகர்த்துவிடுதல் என்ற மிக மோச மான சதித்திட்டங்கள் நடந்தேறுகின்றன.

எனினும் இந்த சதித்திட்டங்களை இன்ன மும் அறியாதவர்களாக நம் தமிழ் அரசியல் தலைவர்கள் இருப்பதுதான் மிகப்பெரிய அபத்தம்.
எதுவாயினும் இது விடயத்தில் தமிழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
பொதுவில் வட புலத்தில் இருக்கக்கூடிய அரச காணிகளை தென்பகுதியினருக்கு வழங்கு கின்ற வேலைத்திட்டங்கள் ஏதோவொரு வகை யில் பிரதேச செயலகங்களுக்குத் தெரிய வரும்.
இவ்விடத்தில் தமிழ் உத்தியோகத்தர்கள் இத்தகவல்களை தமிழ் மக்களுக்குத் தெரியப் படுத்த வேண்டும்.

எங்கெல்லாம் காணி கபளீகரம் நடக்கிறதோ அந்தத் தகவல் அந்தந்தப் பகுதி மக்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துவதன் மூலம் அந் தந்தப் பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரி வித்து நிலக்கபளீகரத்தை தடுக்க வேண்டும்.

இவ்வாறு தமிழர் தாயகத்தில் நடக்கின்ற நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் அந்தந்தப் பிர தேச மக்கள் விழிப்பாகவும் எந்த நேரத்திலும் வீதிகளில் இறங்கி அகிம்சை வழியில் போரா டவும் தயாராக இருந்தால் தமிழ்ப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தும் நய வஞ்சகத் திட்டங்கள் தவிடுபொடியாகும்.
இதற்காக இளைஞர்கள் இணையவழித் தொடர்புகளைப் பயன்படுத்தி தகவல் பரிமாறிக் கொள்ளலாம்.

உதாரணமாக முல்லைத்தீவில் அரச காணி கள் சிங்கள மக்களுக்கு வழங்கப்படுகிறது என்ற தகவல் முல்லைத்தீவின் மூலைமுடுக் கெல்லாம் பரவ வேண்டும்.
இதன் அடுத்தபடியாக வரலாற்று முக்கியத் துவம்மிக்க முல்லைத்தீவு மண்ணை சிங்கள மயப்படுத்தும் செயல் இடம்பெறுகிறது என்ற செய்தி அத்தனை தமிழ் மக்களுக்கும் விளங் கும் படியாக அறிவிக்கப்படுவதும் கட்டாயம்.

கூடவே நீதி நியாயம் உணர்ந்த சிங்கள மக் களுக்கும் தென்பகுதியில் இயங்கும் மனித நேய அமைப்புகளுக்கும் இதனைத் தெரியப் படுத்துவதன் மூலமாகத் தமிழர் தாயகத்து மண்ணை நாம் காப்பாற்ற முடியும்.
இதைச் செய்வதில் தமிழ் அரச உத்தியோகத் தர்களின் தார்மீகப் பணி மிகமிக அவசியம்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila