தமிழர் தாயகப் பகுதிகளில் காணப்படும் இராணுவ வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்வதைப் புறக்கணிக்குமாறு வவுனியா பிரஜைகள் குழு மக்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
வவுனியா பிரஜைகள் குழு இது தொடர்பான அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ் மக்கள் தங்கள் உடலை வருத்தி வியர்வை சிந்தி உழைத்த பணம் தமிழர் தாயகத்தில் அச்சுறுத்தலாகவும் – இடையூறாகவும் இராணுவத்தினரது பயன்பாட்டுக்குச் சென்றடையும் நிலைமைகள் தொடர்பாக ஒவ்வொரு பிரஜையும் தெளிவுபெறவேண்டுமென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்தில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும் சிவில் நிர்வாக வெளியை வலியுறுத்தும் வகையிலும் இராணுவ வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்வதைத் தவிர்த்துக்கொள்வதுடன் அதனை முற்றுமுழுதாகப் புறக்கணிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.