யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் பதிவேட்டில் கையொப்பமிட்டு தனது கடமையை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்து, கிறிஸ்தவ, பௌத்த, இஸ்லாம் மத குருமார்களின் ஆசியுரையின் பின்னர், சம்பிரதாயபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யாழ். மாவட்டத்தில் தற்போது தலைத்தூக்கியுள்ள மதுப்பாவனை மற்றும் வாள்வெட்டு சம்பவங்கள் போன்ற சமூக கலாசார சீர்கேடுகளை கட்டுப்படுத்தும் முகமாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் இவர் விசேடமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1982ஆம் ஆண்டு சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றியிருந்த கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் பின்னர் அங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில், சுமார் 34 வருடங்களின் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் நிலவும் சமூக கலாசார சீர்கேடுகளை கட்டுப்படுத்துதற்கான உரிய நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாக கடமையை பொறுப்பேற்றுக் கொண்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.