ஐக்கிய இராச்சியத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் புதிய குடிவரவுச் சட்டமொன்று ( Immigration Act 2016) அமுலுக்கு வந்துள்ளது.இச்சட்டமானது அந்நாட்டுக்கு குடிபெயர்ந்து நிரந்தர வதிவுடமை மற்றும் பிரித்தானிய குடியிரிமை பெறாதோர் தொடர்பிலான பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. முக்கியமாக அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அந்நாட்டின் நலன்புரிசேவைகளை அணுகுதல், வேலைசெய்தல், வங்கிக் கணக்குகளை கையாளுதல், வாகன அனுமதிப் பத்திரங்களை எடுத்தல் மற்றும் வாடகைக்கு வீடுகளை எடுத்தல் தொடர்பில் மிகக் கடுமையான விதிமுறைகளைக் கூறுகின்றது . 01.இச்சட்டத்தின்படி பிரித்தானியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து வேலை செய்வது குற்றமாகும். 02.சட்டவிரோதாமாக தங்கியுள்ளோருக்கு வேலைகொடுக்கும் வேலை தருனர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்தல். 03.வீட்டு உரிமையாளர்கள் தம்மிடமுள்ள வீடுகளை வாடகைக்கு எடுப்பவருக்கு வதிவிடவுரிமை இருக்கின்றதா என பரிசீலிப்பதற்கான உரிமையை வழங்குகின்றது . 04.குடிவரவு அமுல்படுத்தல் அதிகாரிகளுக்கு சந்தேகநபர் தொடர்பில் அவரது உடைமைகள் மற்றும் வசிப்பிடத்தில் சோதனை செய்வதற்கும் அவரது அடையாளத்தை உறுதிசெய்யும் ஆவணங்களைக் கைப் பற்றிக் கொள்வதற்குமான உரிமையைக் கொடுக்கின்றது. 05.பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு குற்றவாளிகளுக்கு இலத்திரனியல் செருகிகளைப் பூட்ட (Electronic Tag) உரிய அதிகாரிகளுக்கு உரிமையை வழங்குகின்றது . 06.அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஆதரவற்ற நிலைமையிலுள்ள நபர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது . பிரித்தானியாவில் தொடர்ந்துவரும் குடிவரவு நெருக்கடியை கருத்தில் கொண்டு பிரித்தானியாவுக்குள் நுழைந்த அநாதரவான சிறுவர்களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 07.ஐரோப்பிய ஒன்றிய நாடுகளல்லாத வெளிநாட்டு திறமைசாலிகளை வேலைக்கமர்த்தும் தொழில் வழங்குனர்களுக்கு தீர்வை விதிக்கும் நடைமுறை அமுல்படுத்தப் பட்டுள்ளது. 08.வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணும் பொதுச் சேவையிலுள்ளோர் சரளமான ஆங்கில மொழியைப் பேசுபவர்களாக இருத்தல் வேண்டும். 09.சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை நாடுகடத்துவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக குடிவரவுச் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளை கூடுதலான அதிகாரங்களைக் கொடுக்கின்றது.போன்ற வரையறைகள், கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.ஐக்கிய இராச்சியத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் புதிய குடிவரவுச் சட்டமொன்று ( Immigration Act 2016) அமுலுக்கு வந்துள்ளது. 10.இச்சட்டமானது அந்நாட்டுக்கு குடிபெயர்ந்து#3009; நிரந்தர வதிவுடமை மற்றும் பிரித்தானிய குடியிரிமை பெறாதோர் தொடர்பிலான பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. முக்கியமாக அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அந்நாட்டின் நலன்புரிசேவைகளை அணுகுதல், வேலைசெய்தல், வங்கிக் கணக்குகளை கையாளுதல், வாகன அனுமதிப் பத்திரங்களை எடுத்தல் மற்றும் வாடகைக்கு வீடுகளை எடுத்தல் தொடர்பில் மிகக் கடுமையான விதிமுறைகளைக் கூறுகின்றது.