வேர்கள் வெளியினில் தெரிவதில்லை – சில வேங்கைகள் முகவரி அறிவதில்லை… பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை கரும்புலிகளின் கல்லறை வெளியில் இல்லை…’
ஈழப் போராட்டத்திற்கு தனது கவி வரிகள் ஊடாக வலுச் சேர்த்திருந்த புதுவை இரத்தினதுரை, கரும்புலிகளின் தியாகத்தை இவ்வாறு எழுத்துக்களால் வடித்துள்ளார்.
ஆம், கரும்புலிகள், விடுதலைப் போராட்டத்தின் தியாகப் பலிபீடங்கள். தம்முயிரை மாய்த்து தாய் நிலத்தின் விடிவிற்காய் களமாடிய மறவர்களே இந்த கரும்புலிகள். அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 5ஆம் திகதி கரும்புலிகள் தினம் விடுதலைப் புலிகளினால் அனுஷ்டிக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகளின் விசேட படைப்பிரிவாக கடந்த 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் திகதி, அதாவது இதே போல் ஒரு நாளில்தான் ‘கரும்புலிகள்’ என்ற தனிப் பிரிவு விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்டது.
ஈழ விடுதலைப் போராட்டத்தில், எதிரியை விரட்டி அடிப்பதற்காய் தன்னுடலில் குண்டுகளை கட்டி வெடிக்க வைத்து தன்னுயிரை தியாகம் செய்தவர்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காய் இந்த நாள் புலிகளினால் உருவாக்கப்பட்டது.
போராட்ட வரலாற்றில் முதல் கரும்புலியாக அறியப்படும் ‘மில்லர்’ என்ற இயக்கப் பெயருடன் அழைக்கப்படும் வல்லிபுரம் வசந்தன் என்ற போராளி, இதே மாதிரியான ஒரு நாளில் குண்டுகளை உடலில் கட்டி சிங்கள இராணுவத்தை தாக்கி கதிகலங்க வைத்திருந்தார்.
இந்த நிலையில்தான் முதலாவது கரும்புலி மில்லரின் தியாக நாளான ஜூலை மாதம் 5ஆம் திகதி கரும்புலிகள் தினமாகியது.
இறந்தவர்களுக்காய் அழுதவர்களுக்கு மத்தியில் அழுதவர்களுக்காக இறக்கத் துணிந்தவர்களே இந்த கரும்புலிகள் என இவர்களது தியாகத்தை தமிழினம் போற்றுகிறது.
ஈழத்தின் தியாகச் சுடர்களாய் திகழும் கரும்புலிகள் எதிரியை தரையிலும், கடலிலும், வானிலும் வேட்டை ஆடிய வரலாறாக 330 தாக்குதல் இடம்பெறுகின்றன. உயிர் வாழப் போராடும் உயிரினங்களுக்கு மத்தியில் தன்னினம் வாழ தன்னுயிர் தந்த கரும்புலிகளை பூசிக்க ஈழத்தமிழினம் என்றென்றும் மறப்பதில்லை.
வேர்கள் வெளியினில் தெரிவதில்லை – சில வேங்கைகள் முகவரி அறிவதில்லை… பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை கரும்புலிகளின் கல்லறை வெளியில் இல்லை…’ஈழப் போராட்டத்திற்கு தனது கவி வரிகள் ஊடாக வலுச் சேர்த்திருந்த புதுவை இரத்தினதுரை, கரும்புலிகளின் தியாகத்தை இவ்வாறு எழுத்துக்களால் வடித்துள்ளார்.ஆம், கரும்புலிகள், விடுதலைப் போராட்டத்தின் தியாகப் பலிபீடங்கள். தம்முயிரை மாய்த்து தாய் நிலத்தின் விடிவிற்காய் களமாடிய மறவர்களே இந்த கரும்புலிகள். அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 5ஆம் திகதி கரும்புலிகள் தினம் விடுதலைப் புலிகளினால் அனுஷ்டிக்கப்படுகிறது.விடுதலைப்புலிகளின் விசேட படைப்பிரிவாக கடந்த 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் திகதி, அதாவது இதே போல் ஒரு நாளில்தான் ‘கரும்புலிகள்’ என்ற தனிப் பிரிவு விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்டது.ஈழ விடுதலைப் போராட்டத்தில், எதிரியை விரட்டி அடிப்பதற்காய் தன்னுடலில் குண்டுகளை கட்டி வெடிக்க வைத்து தன்னுயிரை தியாகம் செய்தவர்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காய் இந்த நாள் புலிகளினால் உருவாக்கப்பட்டது.போராட்ட வரலாற்றில் முதல் கரும்புலியாக அறியப்படும் ‘மில்லர்’ என்ற இயக்கப் பெயருடன் அழைக்கப்படும் வல்லிபுரம் வசந்தன் என்ற போராளி, இதே மாதிரியான ஒரு நாளில் குண்டுகளை உடலில் கட்டி சிங்கள இராணுவத்தை தாக்கி கதிகலங்க வைத்திருந்தார்.இந்த நிலையில்தான் முதலாவது கரும்புலி மில்லரின் தியாக நாளான ஜூலை மாதம் 5ஆம் திகதி கரும்புலிகள் தினமாகியது.இறந்தவர்களுக்காய் அழுதவர்களுக்கு மத்தியில் அழுதவர்களுக்காக இறக்கத் துணிந்தவர்களே இந்த கரும்புலிகள் என இவர்களது தியாகத்தை தமிழினம் போற்றுகிறது.ஈழத்தின் தியாகச் சுடர்களாய் திகழும் கரும்புலிகள் எதிரியை தரையிலும், கடலிலும், வானிலும் வேட்டை ஆடிய வரலாறாக 330 தாக்குதல் இடம்பெறுகின்றன. உயிர் வாழப் போராடும் உயிரினங்களுக்கு மத்தியில் தன்னினம் வாழ தன்னுயிர் தந்த கரும்புலிகளை பூசிக்க ஈழத்தமிழினம் என்றென்றும் மறப்பதில்லை.