பாணந்துரையில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என சர்வதேச நாடுகள் பல அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் கூட்ட தொடரின் போதும் யுத்தக்குற்றம் குறித்த விசாரணைகள் இலங்கையில் மந்தக்கதியிலேயே முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டது.
முன்னதாக சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி, யுத்தக்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிமன்றத்தினை அனுமதிக்க போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
எனினும், இது ஜனாதிபதியின் தனிப்பட்ட கருத்து எனவும், அது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்லவெனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.