புதிய அரசியல்யாப்பு தயாரிப்பதற்காக மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்காக, நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும் சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க, கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், எனினும் சமஷ்டி முறையிலான தீர்வு திட்டத்திற்கு வடக்குமாகாண தமிழ் அரசியல்வாதிகளே ஆர்வம் காட்டி வருவதாகவும், பெரும்பான்மையான வடக்கு மக்கள், ஐக்கிய இலங்கையை ஆதரிக்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறானபோதும் குறித்த குழுவிற்கு தமது கருத்துக்களை பதிவு செய்திருந்த பெரும்பாலான தமிழ் மக்கள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த குழுவில் அங்கம் வகித்திருந்த வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா அவர்கள் வெளிப்படைய உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.