பருத்தித்துறையில் தமிழரசு கட்டைப்பஞ்சாயத்து!


tnpf

தமிழ் தேசிய பேரவையின் கீழ் பருத்தித்துறை நகரசபையில் போட்டியிடும் வேட்பாளர் ஆசிரியர் சுரேஸ் என்பவரை தேர்தலில் இருந்து ஒதுங்குமாறு தபிழரசுக்கட்சி அழுத்தம் பிரயோகித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே தபிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் பெண் வேட்பாளரை கடத்தி மிரட்டியிருந்தார்.இன்னொரு தமிழரசு வேட்பாளர் பயங்கரவாதத்தடை சட்டம் மூலம் பிடித்து சிறையிலடைப்பதாக மிரட்டி இருந்தார்.
இந்நிலையில் பருத்தித்துறை நகரசபை தேர்தலில் போட்டியிடும் வட்டாரம்8ல் அகில இலங்கை தமிழ்கங்கிரஸ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொள்ள சொல்லி இலங்கை தமிழரசுக்கட்சியினர் மிரட்டியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஈ.பி.டி.பி வேட்பாளரொருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கொள்ள முற்பட்டதும் அதனை அரசியல் விளம்பரமாக்க முற்பட்ட வேளை அகப்பட்டுள்ளார். கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு போட்டியிடும் ஈ.பி.டி.பி வேட்பாளர் ஒருவரே பொய்யான முறைப்பாட்டை செய்தமைக்காக இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கரவெட்டி ராஜகிராமத்தை சேர்ந்த ஈபிடிபி சார்பு உள்ளூராட்சிமன்ற வேட்பாளரே இந்த நாடகம் ஆடியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தன்னை இனம்தெரியாதவர்கள் தாக்கி, மண்ணெண்ணெய் ஊற்றி தீவைக்க முயன்றதாக நெல்லியடி காவல்துறையில்; முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இது பொய் முறைப்பாடென்பது தெரியவந்தது.இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியதையடுத்து அவரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila