
யாழ் பல்கலை நிகழ்வுகளில் தடிகள்
பொல்லுகளுடன் நின்று தமிழ்மாணவர்களுடன் கலகம் விளைவித்த சிங்கள மாணவர்களின் படங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. அதில் தடிகள் பொல்லுகளுடன் காணப்படுவது தமிழ் மாணவர்கள் என்று சில ஊடகங்களில் வெளியாகிய தகவலை அடுத்து குழப்பம் விளைவித்த சிங்கள மாணவர்களின் முன்னின்று நடாத்தியவர் அனுராதபுரத்தை சேர்ந்த சுடேஸ் கொடகொட என அறியக்கிடைக்கிறது. அத்துடன் தடிகள் பொல்லுகளுடன் ஓடிஓடி தாக்கியவர்கள் அனைவரும் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் திருநெல்வேலிப்பகுதியில் பெரிய ரவுடிகளாக சுற்றிவருபவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த படத்திலுள்ள சிங்கள மாணவர்தான் முன்னிலையில் பொல்லுகளுடன் நின்று ஆரம்பித்து வைத்தார் என்றும் அதனை புகைப்படம் எடுத்த யாழ் செய்தியாளரை புகைப்படம் எடுத்தால் உனக்கும் அடிப்போம் என்று சிங்களத்தில் தகாத வார்த்தைகளால் மிரட்டியதாகவும் சொல்லப்படுகின்றது.