போரின்போது தமிழ் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும். இதற்காக வடக்கு, கிழக்கை மையப்படுத்தி தேசிய ஆராய்ச்சி பேரவையின் காரியாலயமொன்றை மாங்குளத்தில் நிறுவவேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இலங்கை தேசிய ஆராய்ச்சிப் பேரவை சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த சிறிதரன், இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுள் இதுவரை 103 பேர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன், புலன் விசாரணைகளின்போது இராணுவத்தினரால் செலுத்தப்பட்டுள்ள ஊசி மருந்து காரணமாக பெரும்பாலான முன்னாள் போராளிகளுக்கு இடுப்பின்கீழ் பகுதி செயலிழந்து காணப்படுகின்றது. இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் முன்னாள் போராளிகள் இவ்வாறு மரணமடைவது குறித்த உண்மை கண்டறியப்பட வேண்டும். இதற்கான வெளிப்படைத்தன்மையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வைத்தியர் தர்மேந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, இராணுவத்தினரால் வழங்கப்பட்ட புனர்வாழ்வு மற்றும் விசாரணைகளின்போது முன்னாள் போராளிகளுக்கு ஊசிமருந்து ஏற்றப்பட்டுள்ளது. இதனால், பலரின் இடுப்புக்கு கீழ் பகுதி செயலிழந்து காணப்படுகின்றது. இது தொடர்பில் என்னிடம் பலர் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், உயிர்ப் பாதுகாப்பைக் கருதி அவர்கள் அதை வெளிப்படையாகக் கூறவில்லை. இந்நிலையில், போரின்போது தமிழ் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
முன்னாள் போராளிகளின் மரணம் குறித்த உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்: சிறிதரன்
Posted by : srifm on Flash News On 03:49:00

Related Post:
Add Comments