லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் : நால்வர் உயிரிழப்பு, 20 பேர் காயம் – (3 ஆம் இணைப்பு)

machete-wielding attack 1  

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று புதனன்று இடம்பெற்ற தாக்குதலில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலாளியும், அவரால் தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரியும் உயிரிழந்தவர்களுள் அடங்குவர். இதனைத் தொடர்ந்து மிகப்பெரும் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக, மாநகர காவல்துறை துணை ஆணையர் மார்க் ரௌலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தாக்குதலை அடுத்து நாட்டியின் அதியுயர் பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டம் பிதமர் தலைமையில் இரவு தொடர்கிறது.
மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எட்டு பேரில், இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதென அதன் துணை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
லண்டன் மாநகர வீதிகளில் பாதுகாப்புக்காக கூடுதல் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என மாநகர காவல்துறையும், உள்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்தை “பயங்கரவாத தாக்குதலாக” கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

லண்டனில்   பயங்கரவாதத் தாக்குதல் : இருவர் உயிரிழப்பு (2 ஆம் இணைப்பு)
லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தின் முன்பாக இன்று பிற்பகல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 30 வயது மதிக்கத்தக்கவர் என்றும் அவரது உடல் பஸ் ஒன்றின் சில்லுக்கு அடியில் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இந்த சம்பவத்தில் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக லண்டன் அம்புலன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சாம்பல் நிற Hyundai i40 காரில் வெஸ்ட்மின்ஸ்ரர் பாலத்தினை கடந்து தாக்குதல் நடத்தும் நோக்கில் பயங்கரவாத சந்தேக நபர் வந்தபோது பொலிஸ் அதிகாரி குறித்த காரினை தடுத்து நிறுத்தியுள்ளார். இதன்போது தாக்குதலாளி வாள் போன்ற பெரியதொரு கத்தியினால் பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் உஷாரடைந்த பொலிஸார் சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தாக்குதல்தாரி  காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் பராமெடிக்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை  சந்தேக நபரின் தாக்குதலினால்  காயமடைந்த  பொலிஸ்  அதிகாரி  மரணமடைந்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற சதுக்கம் மற்றும் லண்டன் நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் காவல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
லண்டனின் மத்திய பகுதியில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலானது அவர்களால் விடுக்கப்பட்ட பெரும் அச்சுறுத்தல் என நோக்கர்கள் கருதுகின்றனர்.

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல்
பிரித்தானிய பாராளுமன்ற வளாக முன்றலில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தாக்குதல்களால் மத்திய லண்டன் பெரும் பதற்றத்துக்கு உள்ளாகியுள்ளது.
காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்குதலாளி ஒருவர் கத்தியால் குத்திய சம்பவத்துடன் பாதசாரிகளை வாகனத்தால் மோதிய சம்பவமும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது . காவல்துறை அதிகாரியை கத்தியால் குத்திய மேற்படிநபர் காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து பாராளுமன்ற வளாகம் உட்பட சுற்றாடலில் உள்ள முக்கிய கட்டங்கள் அவசரமாக மூடப்பட்டன.
வெஸ்ற் மின்ஸ்ரர் நிலக்கீழ்தொடருந்து நிலையம் மூடப்பட்டது. இந்தப்பகுதிகளிலிருந்து பொதுமக்களும்வெளியேற்றப்பட்டனர்.
பிரதமர் தெரேசா மே க்கு எந்தபாதிப்பும் இல்லையெனவும் அவர் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்ததாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் எயார் அம்புலன்ஸ் எனப்படும் வான்மார்க்க நோயாளர் உலங்குவானுர்திமூலம் கொண்டுசெல்லப்பட்டனர்.#
machete-wielding attack 1
machete-wielding attack 2
machete-wielding attack 3
machete-wielding attack 4
machete-wielding attack 5
machete-wielding attack 6
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila