‘தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்’ எனும் கருத்துப்பகிர்வில் பங்கேற்றார் சம்பந்தன்
மன்னார் பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ‘தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்’ எனும் கருத்துப்பகிர்வு, ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் ஞானோதய மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. குறித்த கருத்துப்பகிர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை, திருகோணமலை மறைமாவட்ட ஆயர் றோயல் இம்மானுவேல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் துரைராஜாசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொது அமைப்பினர் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலில் மனித உரிமை, தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய வகிபாகமும் அதன் நிலையியலும் என்பன உள்ளிட்ட பல தலைப்புக்களின் கீழ் கலந்துரையாடப்பட்டது.
Add Comments