யுத்தத்தின்போது மக்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறியதையடுத்து, அப்பகுதியை இராணுவம் ஆக்கிரமித்திருந்தது. எனினும் வைத்தியசாலை சூழலை விடுவிக்காததையடுத்து பூநகரி வைத்தியசாலை தற்போது பிறிதொரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொதுமக்களது தேவைக்கு குடிநீரைப் பயன்படுத்துவதற்கு கூட இராணுவம் அனுமதி மறுத்தே வருகின்றது. முழுமையாக இராணுவமயமாகவே பூநகரி மாறியுள்ளதாவெனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே பூநகரியின் கௌதாரி முனைப்பகுதிகளினில் காணிகளை கொள்வனவு செய்வதில் இராணுவமும் தென்னிலங்கையை சேர்ந்தவர்களும் முனைப்பு காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.