
நல்லாட்சி அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள, காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் குறித்து, அரசாங்கம் கருத்து கோரியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூலம் தொடர்பில், அரசாங்கம் கருத்து கோரியதாக சுட்டிக்காட்டியுள்ளது.
காணாமல் போனவர்கள் அலுவலகம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த முக்கிய பரிந்துரைகளை, அரசாங்கம் ஏற்றக்கொண்டு வர்த்தமானியில் அறிவித்திருந்தமை மகிழ்ச்சி என்றும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சட்டமூலம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டால், காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நியாயம் கிடைக்க சாத்தியமுண்டு என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.