அரசாங்கம் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்குள் இலங்கையை இராணுவ மயமாக்கத்தில் இருந்து விடுவிக்க உத்தரவாத மளித்துள்ளது. சர்வதேசத்திடம் அரசாங்கம் தெரிவித்திருக்கும் இவ் உத்தரவாதத்தினை இவ்வார இறுதியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மீள தெரிவித்திருந்தார்.
இவை அரசாங்கத்தின் தெரிவிப்பாக இருக்கின்ற போதும்இ சமகாலப்பகுதியில் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ மயமாக்கத்திற்குப் புறம்பாக இராணுவமயமாக்கத்தினை மேற்கொள்வதற்கான புதிய நடவடிக்கைகளும் நடைபெற்ற வண்ணமே உள்ளன.
பொதுவாக வடக்கில் பலரது கவனத்தினையும் ஈர்க்கும் யாழ்குடாநாடு போன்றவற்றில் இராணுவமயமாக்கம் குறைக்கப்பட்டாலும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் இராணுவமயமாக்கத்திற்கான நடவடிக்கைகளில் படைத்தரப்பு ஈடுபட்டே வருகின்றது. இந்த வகையில் தற்போது கூட பண்ணைகளை அமைப்பதற்காக முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகத்திடம் இராணுவத்தினர் காணிகளைக் கோரியுள்ளனர்.
உள்நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் இராணுவ மயமாக்கம் தவிர்க்கப்படவேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் இருந்த வண்ணமுள்ளன. கடந்த மஹிந்த ராஜபக் ஷ காலத்தினில் மேற்கொள்ளப்பட்ட இராணுவமயமாக்கத்தினை தாம் வெகு விரைவில் நிவர்த்தித்து விடுவோம்.
கடந்த அரசாங்கமே இராணுவ மயமாக்கத்தினை மேற்கொண்டது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறைகூறிவருகின்றார். எனவேஇ இராணுவமயமாக்கம் நிவர்த்திக்கப்படுவது ஜனநாயகத்தினை நிலைநிறுத்துவதற்கும் மனித உரிமைகளை மதிப்பதற்கும் அவசியமாகவுள்ளது என்பதனை அரசாங்கமும் பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டுள்ளது.
தற்போது ஜெனீவா கூட்டத்தொடர் இடம்பெறும் நிலையில் சர்வதேசத்தின் அழுத்தத்திற்கு உரிய விடயங்களில் ஒன்றாகவும் இவ் இராணுவ மயமாக்கம் உள்ள நிலையில் அரசாங்கம் இராணுவமயமாக்கத்தினை படிப்படியாகக் குறைப்பதற்கு சொல்லளவில் மாத்திரமின்றி செயலளவிலும் செயற்படவேண்டியுள்ளது.
கடந்த மஹிந்த ரஜபக்சஷ அரசாங்கம் இராணுவத்தினரை வர்த்தக முயற்சிகளில் ஈடுபடுத்துதல்இ பண்ணைகளை நிர்வகித்தல் மற்றும் கொண்டு நடத்துதல்இ உற்பத்தித் தொழிற்சாலைகளை நடத்துதல்இ சுற்றுலா விடுதிகளை நடத்துதல்இ சுற்றுலா மையங்களை நிர்வகித்தல் என பலதரப்பட்ட பொருளாதார மற்றும் இலாபம் ஈட்டும் முயற்சிகளிலும் ஈடுபடுத்தியிருந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினர் சுற்றுலா விடுதியினை நிர்வகிக்கின்றனர். இதற்கு மேலாக யுத்தத்தின் காரணமாக கடந்த 26 வருடங்களுக்கு முன் மக்கள் இடம்பெயர்ந்த அந் நிலங்களில் இராணுவத்தினர் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றனர். அங்கு தொழிற்சாலைகளையும் படையினர் நடத்துகின்றனர். வலோத்காரமாக கையகப்படுத்திவைத்திருக்கும் மக்களின் நிலங்களில் தம்மால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மருதனார்மடம் சந்தைக்கு இராணுவ வாகனங்களில் விற்பனைக்காக பொருட்களை அனுப்புகின்றனர்.
சட்டத்திற்கு முரணாக வெளியேற்றப்பட்ட அப் பகுதி மக்கள் இன்றும் இடைத்தங்கல் முகாம்களில் வசிக்கின்றனர்.
தற்போதைய அரசாங்கம் வலிகாமம் வடக்கில் காணிகளில் ஒரு பகுதியினை விடுவித்துள்ளது. அதனை யாரும் மறுக்க முடியாது.
ஆனால்இ மேலும் நிலங்கள் விடுவிக்கப்படவேண்டியுள்ளன. இவை தடையின்றி நடந்தாலே இராணுவத்தினரின் அதிகாரம் குறைக்கப்படும்.
அதுகாலவரையில் இராணுவம் தன்னுடைய கையில் உள்ள வலயங்களிலும் அதனோடு ஒத்த விடயங்களிலும் ஆட்சி அதிகாரத்தினை செலுத்வதை தடுக்க முடியாது. இது போன்று கிழக்கு மாகாணம் திருகோணமலையில் மாபிள் கடற்கரை போன்ற சுற்றுலா பகுதிகளை கடற்படையினர் நிர்வகிக்கின்றனர். அங்கு பொதுமக்கள் நுழைவதாயின் கூட கடற்படையினரின் கட்டண நுழைவுச்சீட்டு பெறவேண்டும். மேற்கூறப்பட்டவைகள் கடந்த அரசாங்கத்தின் வழிவந்த பிரச்சினைகளாகும். இவைகள் ஒரே இரவில் தீர்க்கப்பட முடியாவை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. எனினும் இவற்றின் தீர்வுகளுக்காக மக்களை பொருத்திருக்கவும் எதிர்பார்க்க முடியாது. விரைவுப் பொறிமுறை அவசியாகவுள்ளது. ஏல்லாவற்றுக்கும் மேலாக வடக்கில் தற்போதும் இராணுவத்தினர் புதிய இராணுவமயமாக்கத்திட்டங்களை ஆரம்பிப்பது நிலைமைகளைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. தற்போதும் கூட முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் பண்னைகளை அமைப்பதற்காக காணிகளைக்கோரியுள்ளனர் என்ற பிரச்சினை தலைதூக்கியுள்ளது.
எனினும் அண்மையில் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரஇ தற்போதே தாம் இராணுவத்தினரின் வர்த்தக முயற்சிகளை நிறுத்தும் படி தெரிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனை சர்வதேசத்திடமும் அவர் தெரிவித்திருந்தார். வேளிநாட்டு அமைச்சர் அவ்வாறு தெரிவித்திருந்தபோதும் நடைமுறையில் சமகாலத்தில் முல்லைத்தீவில் படையினர் பண்னைகள் அமைப்பதற்கான காணிகளைத் தருமாறு மாவட்ட அரசாங்க நிர்வாகத்திடம் கோருவது அரசாங்கத்தின் போக்குத் தொடர்பில் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட பிரதேச காணிப்பயன்பாட்டுக் குழுவிடம் பாதூப்புப் படைகளின் அங்கமான சிவில் பாதுகாப்புத் திணைக்களம் பெருவாரியான காணிகளையே பண்னைகள் அமைப்பதற்காக கோரியுள்ளது. அவற்றின் விபரங்கள் இதுவாகவுள்ளன.
விசுவமடு கிழக்குஇ விசுவமடு வடக்குஇ விசுவமடு மேற்குஇ கோணாவில்இ புதுக்குடியிருப்பு மேற்கில்;இ உடையார் கட்டு மேற்குஇ உடையார்கட்டு வடக்குஇ சுதந்திரபுரம்இ உடையார் கட்டு தெற்குஇ தேவிபுரம்இ தேராவில் என கிராமங்கள் தோறும் பண்னைகள் அமைப்பதற்காக படையினரால் காணிகள் கேட்கப்பட்டுள்ளன. இதற்கு மேலாக உடையார்கட்டு வடக்கு தெற்குப் பகுதியில் இலவசக் கல்வி நிலையம் அமைக்கவும் காணி கோரப்பட்டுள்ளது.
இவ்வாறாக படைத்தரப்பினரால் காணிகள் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அடுத்த மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. அடிப்படையில் பொதுமக்கள் பலர் காணிகள் இன்றி காலாகாலமாக திண்டாடிக்nhண்டிருக்கையில் படையினர் தமக்கு காணிகளை சுவிகரிப்பதில் நாட்டம் காட்டும் செயற்பாடு காணப்படுகின்றமை ஏற்றுக்கொள்ளமுடியாததாகும். இந்த இடத்தில் தான் இராணுவமயமாக்கம் பற்றி வடக்கில் நடப்பதையும் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் கூறப்படுவதனையும் சம சந்தர்ப்பத்தில் சகல தரப்புக்களும் நோக்கவேண்டியுள்ளது.
அரசாங்கம் இராணுவ மயமாக்கத்தினை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்குள் விலக்கிக் கொள்வதாக தெரிவிக்கின்றது. இத் தகவல் சர்வதேசம் வரையில் அரசாங்கத்தினால் உத்தரவாதமாகக் அளிக்கப்படுகின்றது. எனினும் வன்னி மவட்டங்கள் தோறும் ஏற்கனவே படையினர் வசம் ஏராளமான பண்ணைகள் உள்ள நிலையில் அவைகள் விடுவிக்கப்படுவதற்கு பதிலாக மேலும் பண்னைகளை அமைப்பதற்கான மும்முர முயற்சிகளில் படையினர் ஈடுபடுகின்றனர்.
மக்கள் தொழில் முயற்சிகளில் ஈடுபட வசதியில்லாமல் திண்டாடுகின்றனர். போரின் பின்னர் பொது மக்களின் தொழில் முயற்சிள் ஊக்குவிக்கப்படவில்லை. அந்த நிலையில் மக்களின் வளங்களை படையினர் பயன்படுத்தி வர்த்ததக முயற்சிகளில் ஈடுபடுவது ஒருவகையில் இராணுவசுரண்டலும் அடக்குமுறையுமே ஆகும். முன்னைய ஆட்சியில் படையினர் சர்வல்லமை பொருந்தியவர்களாக அவர்கள் சட்டத்தினையும் ஒழுங்கினையும் எவ்வாறும் மீறிவிட செயற்படமுடியும் என்ற எழுதா சட்டம் காணப்பட்டது. தற்போது அதுபோன்ற பாரதூர நடவடிக்கைகள் மாற்றமடைந்துள்ளன. அந்த மாற்றத்தின் பின்னர் சட்ட ரீதியில் இராணுவத்தினர் காணிகளைக் கோருவதும் அதற்கான நடவடிக்கைகளில் இறங்குவதும் வெளிப்படையாக நடைபெறுகின்றது.
இவற்றினை வைத்துப் பார்க்கையில்இ ஒரு வகையில் ஆட்சி மாற்றத்தின் முன்னர் இருந்த நிலைமை பயங்கரமாகவே இருந்தது. இதுபோன்றே ஆட்சி மாற்றத்தின் பின்னர் காணப்படுகின்ற நிலைமையும் ஓர் வகையில் பயங்கரமானதாகவே உள்ளது. இராணுவத்தினர் சட்டத்திற்கு மாறாக அதிகாரத்தினை பிரயோகிப்பது (ஆட்சி மாற்றத்தின் முன்னர்) நல்லதோர் மாற்ற சூழ்நிலையின் பின்னர் சட்ட நடவடிக்கைகளின் இராணுவ பிரசன்னத்தினை விலக்கிக்கொள்ளும் வாய்ப்புள்ளது. எனினும் இராணுவத்தினர் சட்டப்படி மறைமுகமாக தமது அதிகாரங்களைப் பிரயோகித்து காணிகளைப் பெறுவார்களாயின் எந்த மாற்றம் நாட்டில் ஏற்பட்டாலும் இலகுவில் இராணுவத்தினரை இக் காணிகளில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற முடியாது போய்விடும். இச் சூழ்நிலையே தற்போது நிலவுகின்றது என்பதனையும் கூறித்தான் ஆகவேண்டியுள்ளது.
அரசாங்கம் இராணுவ மயமாக்க நீக்கம் பற்றி வெளியுலகிற்குத் தெரிவித்து தான் மனித உரிமகள் விடயத்தில் பலதரப்பட்ட சலுகைளையும் நன்மதிப்பினையும் பெறுகின்றது. மேலும் பெறவும் எத்தனிக்கின்றது. அப்படியானதோர் சூழ்நிலையில் வெளியுலகிற்கு சொல்வது ஒன்று உட் கிராமங்களில் நடப்பது வேறு ஒன்றாக இருப்பது பொருத்தமானதல்ல. அது இதய சுத்தியுடனான ஜனநாயகத்தினை கட்டியெழுப்பும் முயற்சியாக அமையாது. ஒரே அரசாங்கத்திற்குள் வெளிவவகார அமைச்சினதும் பாதுகாப்பு அமைச்சினதும் நோக்கங்கள் வேறுபட்டதாக அமைய முடியாது. அடுத்து அரசாங்கத்தின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம் என்ற நிலைமை காணப்படுவதும் கொடிய போர் மற்றும் இதன் பின்னரான ஜனநாயகத்திற்கு இடமற்ற மகிந்த ஆட்சி போன்ற இடர்களை எதிர்கொண்ட மக்களை மீள்விப்பதற்கானதாக அமையாது.