சீமான் சட்டசபைத் தேர்தல் தோல்வி : ஈழத்தமிழர்க்கே பேரிழப்பு!

மாற்றம் என்பது சொல் அல்ல செயல். செயலில் வீறுகொண்டெழுந்த எங்கள் செந்தமிழன் சீமான் குரல் அடங்காது. அதன் எதிரொலி இடைவிடாது போரொலியாக முழங்கவேண்டும்.
“தொடக்கத்தில் எதையும் வீண்முயற்சி என்பார்கள் வென்றுவிட்டால் விடாமுயற்சி என்பார்கள்” ஒரு தலைவனின் வார்த்தைப் பிரயோகம் சீமான் வெற்றிக்கு வாழ்த்துக் கூறும் கொள்கை வழியின் முன்னெடுப்பிற்கு வெற்றியை தரும்.
ஈழத்தமிழர் ஆதரவும் ஒன்றிணைவும் சீமான் வழிக்கும் நாம்தமிழர் கட்சியின் இரட்டை மெழுகுவர்த்திக்கே உண்டு. இருந்த ஆதரவு தோல்வியில் முடியக் காரணம் என்ன? கடலூரில் திரளான மக்கள் வாக்களிப்பில் ஈடுபடாதது திகைப்பிற்குரிய மர்மம். தமிழ் நாட்டு மக்கள் ஆதரவில் லஞ்சம் துலங்கிய போதும் ஈழத்தமிழர் ஆதரவின் ஆர்வம் குறையவில்லை.தொப்பிள் கொடி உறவின் நெருக்கமான உயர்வான உரிமையில் என்றும் தளர்வு ஏற்பட வாய்ப்பு எதுவும் ஏற்படப் போவதுமில்லை.
இந்தியாவில் ஆறுகோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றார்கள் இருந்தபோதும் அவர்களின் உணர்வுகள் ஈழத்தமிழருடன் இணையவில்லை. இனம் பேரினவாதச் சிங்கள இராணுவத்தால் கொத்துக் கொத்தாக குவிந்து இரத்த வெள்ளத்தில் மிதந்தபோதும் குரல்கொடுத்தவன். தமிழ் நாட்டில் உணர்வோடு எழுந்து உறவோடு உரிமையோடு குரல் கொடுத்துப் போராடியவர்களில் சீமான் முதன்மை பெறுகின்றார். நேரம் காலம் தப்பாது குரல்கொடுத்த இனமானத் தமிழன் சீமான் ஒருவர்தான்.
ஏழாண்டுகள் கடந்தும் எந்த அக்கறையும் தமிழகத் தலைவர்களிடமிருந்து துணிவோடு உயிர்பால், தமிழ்பால் உணர்வுடன் வீறுகொண்டெழவில்லை; செந்தமிழன் சீமான் களத்திலும் தளத்திலும் எதிரிகள் முன்னும் உணர்வோடு நின்றார். தலைவன் கொள்கை வெறியோடான குரல் இன்றும் வான் முட்ட ஒலித்துக்கொண்டே இருக்கிறது அது ஒன்றுதான் சீமான் கண்ட முழுமுதல் முயற்சியின் வெற்றி.
மாறிவரும் உலகில் விடுதலைப் போராட்டங்கள் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்களாக சித்தரிக்கப்படும் சிக்காலான காலகட்டத்தில் வன்னிப் படுகொலையோடு தமிழீழப் போராட்டம் 1958 முதல் தந்தை செல்வநாயகத்தால் துவங்கப்பட்டு பிரபாகரனால் சர்வதேச அரங்கிற்கு வந்த உச்சக்கட்டத்தில் ஈழத்தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் தமிழர்களால் தொடர்ச்சியாக வட்டுக்கோட்டை என்ற இடத்தில் உருவான பிரகடனம் பிரபாகரன் வழிகண்டு நெறிகண்டு உலகமே வியந்து நோக்கிய போராட்டம்.
இதுவே தலைவர் பிரபாகரனை முன்னிறுத்திய நாம்தமிழர் இயக்கம். எந்த விடுதலை இயக்கமும் பெறமுடியாத பெரும் சாதிப்பை நிறுவிட புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்பும் ஒற்றுமையின் ஆதரவும் சிறந்து விளங்க ஆயுதப்போராட்டத்துடன் வடக்கையும் கிழக்கையும் தங்களது நிர்வாக பொருளாதர எல்லைக் காப்புடன் வைத்திருந்த விடுதலைப் புலிகளின் தனியாட்சியின் மாட்சிமையைப் பறையறைவிக்க சீமான் காட்டிய துணிவு யாருக்கு வரமுடிந்தது?
முள்ளிவாய்க்காலுடன் முடிந்து விட்டதா என்ற விளங்காத வில்லங்கமான வியப்பிற்கு விடையளித்து வீரமறவர் களமாடுவர். தமிழீழமே தலைவன் ஆணை ஏற்றவர் போராடுவோம் என்று சத்தியம் ஏற்ற உரத்தகுரல் முழக்கம் தொடர்ந்து கேட்கவேண்டும். இது சீமான் ஒருவரிடம்தான் உணர்வோடும் உரிமையுடன் வெளிப்படும் ஏன். அவன்தான் தமிழன். அவன்தான் இன மான ரோசமுள்ள செந்தமிழன்.
2016 இடம்பெற்ற சட்டசபைத் தேர்தல் தோல்வி சீமானுக்குத் தோல்வி என்றால் அத்தோல்வி உலகத்தமிழன் அனைவருக்குமான தோல்வியாகும். சீமானின் சீற்றம் இத்தேர்தல் தோல்வியால் சற்று தணிந்திருக்கலாம் தொய்ந்து போய்விடவில்லை. பிரபாகரன் தம்பி செந்தமிழன் சீமான் தலைவர் கொள்கை வழியேற்று தன் பயணத்தை என்று தொடங்கினாரோ அந்தப் புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் அது தப்பாது.
சீமான் பேருரைகளும் கொள்கை வழியும் கேட்டு கண்டு ஓடி ஓடி துள்ளிகுதித்த ஈழத்தமிழர் போராட்டம் போராட்டமாக இருப்பதற்கும் எங்கள் தமிழீழத்தின் வலுவும் தலைவன் வழி வாய்மையும் நேர்மை நெறி நிற்கும் போராளி சீமான்தான் எனக் குதுகளித்திருப்பவர்கள்.
இரட்டை மெழுகுவர்த்தியின் இரட்டைச் சொற்கள் 'தனித்தமிழீழ நாட்டைக் காண்பது. தமிழகத்தைத் தமிழன் ஆளவேண்டும் இன்று இதன் வலுவும் நெறியும் விளக்கமும் இன்று தோல்வி காணலாம் சீமான் வெற்றி பின்வரும் சந்ததி தலையில் சுமக்கும் வெற்றியாகும்.
'வேரை இழந்த மரமும் வரலாற்றை மறந்த இனமும் வாழாது.' கவனத்தில் கொண்ட சீமான் 'வரலாற்றைப் படி வரலாற்றைப் படை வரலாறாகவே வாழ்' தலைவன் வார்த்தையில் இறுக்கப்பட்ட சீமான் தோல்வியல்ல-வெற்றியடைவதற்கான விடாமுயற்சி வெற்றிதான் என்று உலகத்தமிழன் உணர்வேடு பாராட்டுப் 'பா' பாடும்போது செந்தமிழன் எப்படி சோர்ந்துவிடக் கூடும்?
ஏழு வருடங்கள் கடந்தும் முள்ளிவாய்க்கால் ஏற்படுத்தியுள்ள வடுக்கள் வாரலாறாகி வலி ஆறாது ரணமாக நாறும் நாற்றம் வற்றாது. நாளும் பாரம்பரிய இனத்தின் மீட்பில் நின்று பேசியும் போராடவும் துணிந்த ஒருவர் உளர் அவரின் கட்சி நாம் தமிழர் கட்சியும் சீமான் எனும் போது
என்று நாம் ஆறுதல் கண்டோம். பயப்படாது உறவுகளின் அவலங்களை முன்வைத்துப் பேசுகின்ற செந்தமிழன் சீமான்தான்.பேரினவாத இனவெறியன் கொடூரமுகத்தை கிழித்தெறியும் வல்லமை பெற்ற போராளியாக முன்நிற்பவர் சீமான்தான் என்று நம்பியுள்ள தலைமுறை .இனவெறியன் துஸ்பிரயோகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரப் போராடும் தலைவன் வளர்த்த போராளியாகப் போராடும் களம் அமைத்த சீமான் கண்டது தோல்வியல்ல வெற்றியின் உயர்பீடமாகும்.
பல இலட்சம் புலம்பெயர் தமிழரின் உள உடல் தாக்கங்கள் அதிகளவு. கண் முன்னே இறந்தவர்கள் காலம் கடந்தும் பயப்படும் நிலை உலகெங்கும் வாழும் தமிழரிடம். அவர்கள் துடி துடிக்கும் துயரம் சுமந்து இறந்து கொண்டு இருப்பதை எவன் துணிந்து முன்வைக்கிறான் சீமான் ஒருவர்தான். அவர் அடைந்தது தோல்வியல்ல.வெற்றிக்கான அடுத்தகட்ட வெற்றியின் வீரமிக்க முன்னேற்றம்.
எத்தனை குடும்பங்கள் வன்னி மண்ணில் வாய்திறந்து பேசமுடியாது பரிதவிக்கின்றார்கள் ஓடி விளையாடப் பயந்து பார்வை இழந்து பரிதவிப்போர். வெடிச்சத்தம் கேட்டாலே திக்பிரமையில் நடு நடுங்கி வாழ்வதை யார் வகை வகையாக அடுக்கி தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவிப்பது? ஈழத்திலும் எவனும் இல்லை, அவனவன் அவன் வழி நாடகத்தை நடிக்கத் தொடங்கிவிட்டனர்.
சீமான் உரிமைக்குரல்தான் உண்மையை உள்ளபடி கேட்கவேண்டும். எத்தனை ஆயிரம் மக்கள் சொந்த மண்ணில் போய் வாழப் பயந்து ஒதுங்கி உளரீதியாக வருந்திக் கொண்டிருப்பவர்களை யார் ஆதாரங்களுடன் ஆவேசமக எடுத்துரைப்பதற்கு? தினம் தினம் சீமான் குரல் கேட்கவேண்டும்.
சிகிச்சை இன்றி சீரான வாழ்வு வாழமுடியாது இன்றும் காயங்களுக்குக் கட்டுப்போடமுடியாமல் சாகடிக்கப்படும் போராளிகளை இனம் காட்டி உணர்வுடன் உரையாற்றும் விடுதலைப் போராளி சீமான் வரவேண்டும்:வீறுகொண்டெழ வேண்டும்.
பேராளிகள் மரணம் புனர்வாழ்வின் மர்மம் போராளிகள் நாட்கள் கடந்து மரணம் அரசியல் பழி.இனவெறியர் கொலைச் சூத்திரம்.புனர்வாழ்வு என்பது சர்வதேசத்திற்குக் காட்டும் போராளிகள் சாவின் சதி.புனர்வாழ்வு பெற்ற போராளிகள் நாளுக்கு நாள் மர்மமாக படுகொலை செய்யப்படுவதை எவன் கேட்கிறான்?
இந்த விதியை யார் மாற்றி எழுதுபவர்? சீமான் எழுச்சி உரைகள்தான் உண்மையைத் வீரத்தோடு விளம்பும் அந்தத் துணிவுள்ளவன் தமிழ்நாட்டில் சீமான் தவிர வேறு எவராலும் முடியாது ஈழத்தமிழர் தலைவர்கள் எனும் கைகூலிப் போலிகளும் கபடநாடகத்தில் கைதேர்ந்த ஆசாமிகளாகிவிட்டனர்
வடமாகணசபை முதல்வர் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போடும் முட்டாள்தனமான தலைவர்களிடமிருந்து முதல்வர் செயல்பாட்டுக்கும் ஆதரவு அதிகளவு விடுபட்டநிலை;. சீமான் சீற்றம் எல்லா நாற்றத்தையும் போக்கடிக்கும் சீமான் தீவிரம் முன்னரைவிட இந்தவேளையில்தான் அதிவேகம் அடையவேண்டும்.
இனவாதம் மதவாதம் திமிர்வாதமாடும் பேரினவாதப் போக்கில் சமநிகர் நாதம் தரப்போறதில்லை முதல்வர் விக்கினேஸ்வரனும் சீமானின் வீரயுரையும் இடைவிடாத போராட்டமாக எழவேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் துன்பதுயர்கள் மத்தியிலும் கவலையோடும் கண்ணீரோடும் சென்று தமிழீழத் தலைவர்கள் என்று சொல்லும் தருதலைகளுக்கு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தங்கள் துயர் போக்குவார்கள் என்ற நம்பிக்கையில் தான் வாக்களித்தனர்
இவர்கள் எங்கள் விடுதலை உரிமை நிலைநாட்டச் சரியான வழியில் உண்மையாக துணிவோடு நடப்பார்கள் என்றுதானே நம்பினோம். அவர்கள் நமது முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு எதிராக அல்லவா உளைச்சளையும் கரைச்சலையும் உபத்திரவத்தையும் தமிழ்தேசியத் தலைவர்கள் கொடுக்கிறார்கள்.
வன்னி இனக்கொலை விசாரணையில் சர்வதேச நீபதிகள் வேண்டும். அவசியமானது என்று வடக்கு முதல்வர் நீதியரசர் விடாபிடியாக வலியுறுத்தி வருகிறார் தமிழ்த் தேசிய கூட்டமைபினர் இரட்டை வேடமிட்டு தட்டிக்கழிப்பது இனத்தின் மீதானதும் விடுதலை உரிமையப் பெறும் உணவற்ற போக்குமாகும் இத்தகையவர்களால் ஈழத்தமிழர்க்கு சாதகமாக எதுவும் சாரப்போவதில்லை. உலகத்தமிழனை தட்டியெழுப்ப சீமானின் பேச்சின் வீச்சின். விசைதான் நாளும் வீசவேண்டும்.
அரசியல் தீர்வை வழங்குவதாக எத்தனை ஆண்டுகள் ஏமாற்றுகிறான்? பேரினவாதிகளிடம் அரசியல் தீர்வு வழங்குவதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை இனவெறியரின் ஒப்பந்தங்கள் கிழிப்பும் அழிப்பு நாளும் கடத்திச் சென்ற ஏமாற்று வித்தை எத்தனைமுறை இந்த 13 வது சட்டத்தை வைத்து காலம் கடத்துகின்றார்கள் இதை ஈழத் தலைகளும் தலையாட்டி கொண்டிருப்பதை அடித்து நெருக்கி கதை கதையாகச் சொல்வதற்கு சீமான் வீறு கொள்ளவேண்டிய கட்டாயத்தின் கால கட்டம்.
25 ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கும் 7 பேரின் விடுதலைக்கு இடைவிடாது குரல் கொடுப்பதுடன் அடிக்கடி சிறைச்சாலை சென்று பார்த்து வரும் உணர்வுமிக்க உறவுகள் வெளிவருவதில் செலுத்தும் அக்கறை சீமானிடம் விடுபட்டுப் போவதில்லை முதுகெலும்பற்றவர்களால் பல்வேறுபட்ட வெறுப்பான விமர்சனங்களை உடைத்து உறுதியிடன் உடன் பிறப்புகள் 7பேரும் விடுதலை பெறவேண்டும் என்பதில் உறுதியுடன் நிற்பவர் சீமான மட்டும்தான்;.
7 பேரும் அக்கினிமேல் நிறுத்தப்பட்ட மெழுகுப் பொம்மைகள் போலானார்கள். அந்தத் தியாகிகள் விடுதலையடைய சீமான் மனிதனாய் மானிடநேயனாய் தினமும் குரல் கொடுத்தபடி இருப்பவர் சீமான். தமிழன் போர் செய்ததும் சண்டை பிடித்துக் கொண்டதும் புதிதல்ல சீமான் தோல்விதான் புதிர்
ஈழப்போர் மறையவில்லை என்பதை சீமான் நடத்தும் போராட்டங்கள்தான் தமிழ்நாட்டில் மெய்ப்பித்துக் கொண்டிருப்பது. 'தியாகம் செய்தவர்கள் செத்தபின்னும் வாழ்கிறார்கள் துரோகம் செய்தவர்கள் வாழும்போதே செத்துப் போகின்றார்கள். தியாகம் செய்ய ஒருவன் தோன்றினால் துரோகம் செய்ய நூறுபேர் தோன்றுவார்கள் ஒவ்வொரு தியாகத்திற்கும் நிழலாக ஒவ்வொரு தூரோகம்
சட்டசபைத் தேர்தல் தந்த பாடம் சீமான் தோல்வி உலகத்தமிழன் முன் பெரும் வெற்றி எத்தனை தடைகள். அவற்றைச் சவாலாக்கி தளராது நின்ற போர்வாள் சீமான். தலைவரைக் கண்டு திரும்பியதுடன் ஏற்பட்ட துணிவோடு பலத்தோடு தொடங்கிய உற்சாகத்தில் தளர்வு காண்டால் ரோசம் கெட்டுவிடும். செந்தமிழன் அண்ணனின் தம்பி மீண்டும் பேருரை நிகழ்த்த வேண்டும் அந்த தெளிவுரையில்தான் உலகத் தமிழன் சிறிதேனும் உறக்கம் கொள்ளுதல் வேண்டும்.
'மற்ற இனங்களுக்கெல்லாம் வாழ்க்கையில் பேராட்டம் எப்போதாவது வருகிறது.தமிழ்த்தேசிய இனத்திற்குப் போராட்டமே வாழ்க்கையாக மாறிநிற்கிறது. அதையே கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன் அடிக்கடி ஆவேசமாகக் குறிப்பிட்டுச் சொல்வதுண்டு நாம்தமிழர்கள் மானத்துடன் வாழவேண்டும். தமிழர் உரிமையை மீட்கும் பயணத்தில் வெற்றி காணவேண்டும்
போரடும் துணிவும் பலமும் சீமானுக்கு இருக்கவேண்டும். இன்று எம்மிடமுள்ள அதிகார மீட்பின் ஈழத்தமிழர் போராட்ட நாயகன் சீமான் என்றாகிவிட்டது. விடுதலை நோக்கிய பயணத்தில் தடைகள் தாண்டி மேற்கொள்ளுதல் வேண்டும். நாம்தமிழர் கட்சியின் தோல்வி தமிழ்நாட்டு மற்றக் கட்சியினர் கொடுத்த பணமும் பொருளும் கொடுத்துப் பெற்ற வெற்றி. பொய்யும் புரட்டும் வாக்களிப்பின் நேரத்தில் நடந்த இன மானம்கெட்ட உணர்வற்றவர் இழிசெயல்களால் நடந்து முடிந்த தேர்தல் இத்தேர்தலில் சீமான் கண்ட தோல்வி ஈழத்தமிழர்க்கே பேரிழப்பு.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila