இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லையென, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் தூதுவரின் சிரேஷ்ட ஆலோசகரான, பேராசிரியர் மைக்கல் நியூட்டன் தெரிவித்துள்ளார். ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹூசைனின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை வெளியானதன் பின்னர், அவர் இக் கருத்தை முன்வைத்துள்ளார். நடைபெற்று முடிந்த யுத்தத்தின்போது, இருதரப்பினராலும் குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், குறிப்பாக இலங்கை படையினர் அதிகளவில் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஐ.நா ஆணையாளர் உள்ளிட்ட பல தரப்பினர் பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான ஒரு சூழ்நிலையில், அமெரிக்க அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளமையானது, பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள அதேநேரம், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேசமும் துணைபோகின்றதா என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அண்மையில் நடைபெற்று முடிந்த ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கச் சென்றிருந்த இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அங்கு வருகை தந்திருந்த புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன், மூடிய அறைகளில் சந்திப்புகளை நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம், சர்வதேசத்தின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை முயற்சித்து வருவதாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை யுத்தக்குற்றத்தில் ஈடுபடவில்லையாம்!

Related Post:
Add Comments