அரசியல் யாப்பில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை: வர்ணசூரிய

d37e8620ea9f4917909273d2e44bb9fd_XL

அரசியல் யாப்பில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய தெரிவித்துள்ளார். சட்டத்தரணி சட்ட மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு கருத்து தெரிவித்த அவர், ‘இலங்கையில் இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச நீதிபதிகளை நியமிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தாலும், அரசியல் யாப்பில் அவ்வாறு செய்வதற்கு எந்த அனுமதியும் இல்லை. நீதிபதிகளை நியமிப்பது அரசியல் யாப்பின் படி ஜனாதிபதியே ஆகும். ஐ.நா கூறுவது போன்று சர்வதேச நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. உள்நாட்டு நீதிபதிகளின் கீழ் இடம்பெறும் நீதிமன்றங்களைக் கண்காணிப்பதற்கும், அதற்கான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கும் மாத்திரமே வெளிநாட்டு நீதிபதிகளிக்கு அழைப்பு விடுக்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila