தேர்தல் விஞ்ஞாபனம் என்பது மக்களை ஏமாற்றும் ஆவணமா?

தேர்தல் காலங்களில் தேர்தல் விஞ்ஞாப னத்தை வெளியிடுகின்ற நடைமுறை இப் போது ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது.

உண்மையில் தேர்தல் விஞ்ஞாபனம் என் பது, குறித்த அரசியல் கட்சியின் அல்லது சுயே ட்சைக் குழுவின் கொள்கைகளை, செயற் பாட்டை, நோக்கத்தை இலக்காக எடுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும்.
சுருங்கக்கூறின் ஒரு கொள்கைப் பிரகட னத்தின் அமுலாக்கத்தை விபரிப்பதாகவே தேர்தல் விஞ்ஞாபனம் அமைய வேண்டும்.
ஆனால் இப்போது தேர்தல் விஞ்ஞாபனம் என்பது தேர்தல் முடிந்த கையோடு கைவிடப் படுவதாகிவிட்டது.

தேர்தலில் வெற்றி பெற்றால் அவ்வளவு தான் தேர்தல் விஞ்ஞாபனம் மறந்து போய் விடும்.
ஆக, இன்றிருக்கக்கூடிய சூழ்நிலையில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு சம்பிரதாயம் என் பதைக் கடந்து மக்களை ஏமாற்றுவதற்கான எழுத்துமூல ஆவணம் என்று கூறுமளவுக்கு வந்துவிட்டது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த தேர்தல் விஞ் ஞாபனத்தில் வடக்கு கிழக்கு இணைந்த... என்ற சொற்பதத்தை வலியுறுத்தியுள்ளது.
வடக்கு கிழக்கு இணைந்த தீர்வு என்றால், வடக்கு கிழக்கு இணையாத தீர்வை ஏற்க முடியாது.

ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பு இல் லாத இடைக்கால வரைபை அமுல்படுத்துவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மிகவும் உறுதியாக உள்ளது.
சமஷ்டி இல்லை, வடக்கு கிழக்கு இணை ப்பு இல்லை, ஒற்றையாட்சி என்பதே தீர்வில் முன்னிற்கும் விடயம் எனப் பலவற்றை தமிழ் இனம் சார்ந்த புத்திஜீவிகள் எடுத்துரைத்த போதிலும் இடைக்கால வரைபில் எல்லாம் இருக்கிறது. அதில் சமஷ்டி இருக்கிறது, சமஷ்டி என்ற சொற்பதம் மட்டுமே இல்லை என்று கூறு மளவுக்கு கூட்டமைப்பின் தலைமை இருக் கிறது. 

வடக்கு கிழக்கு இணைப்பு என்கிற விட யத்தை இடைக்கால வரைபின் இணைப்பில் மட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கருத்தாக முன்வைத்துள்ளதைத் தவிர,
இணைக்கப்படாத வடக்கு கிழக்கு என்ற தீர்வுக்கு உடன்படவும் கூட்டமைப்பு தயாராக இருக்கிறது.
இவ்வாறு வடக்கு கிழக்கு இணைக்கப் படாத தீர்வை ஏற்றுக் கொள்வதற்கு வலிந்து கட்டிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு,

தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்கு இணைந்த தீர்வு என முன்மொழிகிறது எனில், இதைவிட்ட திருகுதாளம் வேறு எதுவு மில்லை எனலாம்.
எதுஎவ்வாறாயினும் தமிழ் மக்கள் நிதான மாகச் சிந்திக்காதவரை எங்களை ஏமாற்று வதையே தங்களின் சிறந்த விளம்பரமாக அரசியல்வாதிகள் கருதுவர் என்பதைப் புரிந்து கொண்டால் மட்டும் அதுபோதும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila