வடக்கு மாகாண விவசாய அமைச்சர் மீது தெரிவுக்குழுவை அமைத்து விசாரணை மேற்கொள் ளுமாறு உறுப்பினர் பரஞ்சோதியி னால் கொண்டுவரப்பட்ட பிரேரணை உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து குறித்த பிரேரணையை ஒரு அறிவித்தலாக முதலமைச்சரு க்கு அனுப்புவது எனவும் தீர்மானி க்கப்பட்டுள்ளது.
பரஞ்சோதியினால் நேற்றைய தினம் கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணை க்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட எந்த ஆளுங்கட்சி உறுப்பினர்களும் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண சபையின் அறுபதாவது அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இதன்போது உறுப்பினர் பரஞ்சோதியினால், விவசாய அமைச்சில் நடைபெற்ற மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள், தொடர் பில் விசாரணை நடத்த வேண்டுமென தீர் மானம் நிறைவேற்றப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்டன.
ஆகவே இந்த சபை ஒரு சுயாதீனமான பக்கச்சார்ப்பின்றிய விசாரணை மேற்கொள்ளும் முகமாக ஒரு தெரிவுக்குழுவை அமைத்து நடவடிக்கை எடுப்பதோடு அக்குழு சுதந்திரமான விசாரணை செய்து விளக்கமாக அறி க்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற பிரேரணை முன்மொழியப்பட்டது.
இந்த பிரேரணை முன்மொழியும் போதே உறுப்பினர் பரஞ்சோதி சுமார் முப்பது நிமிட ங்கள் வரை பேசிக்கொண்டே இருந்தார். இதனால் கடுப்படைந்த உறுப்பினர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதலில் பேசிய உறுப்பினர் தியாகராசா, குறித்த பிரேரணை கட்சி கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. எனவே ஒவ்வொரு கூட்டத்திலும் இதே பிரேரணையை கொண்டுவரு வது ஏற்றுக் கொள்ள முடியாது என கடுமை யாக எதிர்த்தார்.
இதன்போது நீங்கள் வால் பிடிக்கின்றீர் கள் என பரஞ்சோதி கூற கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு கணிசமான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க குறித்த வார்த்தை சபைக்குறிப்பேட்டிலிருந்து நீக்கப்பட்டது.
இதன் பின்னர் பேசிய உறுப்பினர் சர்வே ஸ்வரன், இடம்பெற்றதாக கூறப்படும் குறித்த மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வத ற்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த பிரேரணை மீண்டும் தேவையற்றது என கூறி கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.
இதன்போது பேசிய உறுப்பினர் சிராய்பா மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து ஏற்கெனவே மக்களிடத்தில் நம்பிக்கையீனம் காணப்படுகின்றது. இந்த நிலையில் மீண்டும் ஒரு பிரேரணை தேவையற்றது.
உறுப்பி னர் பரஞ்சோதியினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இருந்தால் அதனை முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழுவிடம் சமர்ப்பியுங்கள்.
அதனை விடுத்து ஏற்கவே முடிந்த விடயத்தை மீண்டும் பிரேரணையாக கொண்டுவருவது மக்களிடத்தே நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் என இடித்துரைத்தார். இதன் பின்னர் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன், சபை விவகார குழுவில் குறித்த விடயம் கலந்துரையாடப்படவில்லை. அது தவிர ஒரு சம்பவம் தொடர்பில் ஒரு விசாரணை தானே நடத்த முடியும்.
ஒரு விடயத்தை வேறு வேறு கோணங்களில் கொண்டுவருவது நேரத்தையும் காலத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் வீணடிக்கும் செயல் என கூறினார். எனினும் பரஞ்சோதியின் இந்த பிரேரணை நியாயமானது என நியாயப்படுத்திய அவைத்தலைவர் சிவஞானம், பரஞ்சோதி இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தே கேள்விக்குட்படுத்துகின்றார். எனவும் கூறினார்.
அவைத்தலைவரின் கருத்தை மறுத்து பேசிய உறுப்பினர் சர்வேஸ்வரன், அதற்காக ஒரு பிரேரணையை சொற்பொழிவு போன்று நடத்திக்கொண்டு இருக்க முடியாது. முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்ட விடயத்தை மீண்டும் நாம் கையிலெடுக்க முடியாது எனவும் கூறினார். பின்னர் பேசிய உறுப்பினர் சிவாஜிலிங்கமும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க குறித்த பிரேரணை பிசிபிசித்து போனது.
எனினும் முடிவில் குறித்த பிரேரணை நிறைவேற்றப்படுவதாக அவைத்தலைவர் அறிவித்தார். எனினும் இதனை பிரேரணையாக நிறைவேற்ற முடியாது எனவும் அறிவித்தலாக முதலமைச்சருக்கு அனுப்புமாறும் சிவாஜிலிங்கம் கோரினார். அதன்படி குறித்த பிரேரணை அறிவித்தலாக நிறைவேற்றப்பட்டது.