வட மாகாண தமிழ் சமூகத்தை திட்டமிட்டு சீரழித்த கூட்டமே, முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றிய பின்னணியிலும் உள்ளனர் என்று மேல்மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் மேல்மாகாண சபை உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புனர்வாழ்வு என்ற புனிதமான பெயருக்குள் மறைந்து கொண்டு முன்னாள் போராளிகளுக்கு ‘விஷ ஊசி’ ஏற்றி அவர்களை குற்றுயிர்களாக்கிய பாவிகள் யாரென்பதை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை சமூகத்தோடு இணைத்துள்ளோம் என கடந்த கால மஹிந்த ஆட்சியாளர்கள் இன்னும் மார் தட்டுகின்றனர். ஆனால் புனர்வாழ்வு என்ற புனிதமான பெயரை பயன்படுத்தி முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டு பலர் இதனால் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடுப்புக்கு கீழ் இயங்காமல் நடைபிணங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது குறித்த உண்மைகளை புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளே தமது சுய வாய் மூல அறிக்கைகள் மூலம் வெளியிட்டுள்ளனர். இது சர்வதேச போர் முறைமைகள் மற்றும் மனித உரிமைகளை மீறி ‘தமிழ் சமூகத்தை’ திட்டமிட்டு அழித்த கொடூரமாகும். எனவே இதனை பாரதூரமாக கருதி சர்வதேச பொறிமுறையுடனான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். இன்றைய நல்லாட்சி அரசாங்கம் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே தமிழ் மக்களின் நம்பிக்கையை அரசு உதாசீனம் செய்யாது அதனை பாதுகாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணத்தை சீரழித்தவர்களே விஷ ஊசி பின்னணியிலும்: சண்.குகவரதன்

Add Comments