அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படவுள்ள சர்வதேச தராதரத்திலான பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் ஆபத்தானதாகக் காணப்படும் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது.
அரசியல் கைதிகளின் உடன் விடுதலையை கோரும் மனுவில் கையெழுத்திடும் நிகழ்வு கொழும்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அரசாங்கம் புதிய, சர்வதேச தரத்துடனான தரத்துடனான பயங்கரவாத தடைச்சட்டத்தைக் கொண்டுவர முயல்கின்றது இந்தச் சட்டமூலம் மக்களை ஒடுக்குவதற்குப் பயன்படப் போகின்றது. தங்கள் உரிமைகளைக் கோரும், நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள் இந்தச் சட்டத்தால் இலக்கு வைக்கப்படலாம்\' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.