உடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின்போது சுன்னாகம் பொலிஸாரின் அசமந்தப் போக்கும் அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளும் தொடர்பாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தினால் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்களால் கடந்த 03. 09.2016 முதல் பாட சாலை நிர்வாகத்திற்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட போராட்டம் கடந்த 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தீவிரமடைந்தமை தொடர்பான செய்தி களை பத்திரிகைகள், இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களினூடாக அறிந்துக் கொள் ளக் கூடியதாக இருந்தது.
®குறிப்பாக கடந்த 9 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சகல பத்திரிகைகளும் சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது செயற்பாடு தொடர்பில் விரிவான செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தது.
உடுவில் பாட சாலை வளாகத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வருகைதந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது கையடக்க தொலைபேசியில் போராடத்தில் ஈடு பட்ட மாணவிகளையும் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களையும்; புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை அவதானிக்கத்தக்கது. இவ்விடயம் தொடர்பில் தனது கவனத்தை செலுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சுன்னாகம் பொலிஸ் நிலை யத்தில் கடமையாற்றும் ரங்கன என கண்டுள்ளது.
® போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் ஆசிரியர்களால் தாக்கப்பட்டமை தொடர்பில் அங்கு கடமை யிலிருந்த சுன்னாகம் பொலிஸார் உடனடி உரிய நடவடிக்கை எடுக்க தவறியமை மற்றும் முறைப்பாடுகள் பதிவு செய்வதை மறுத்தமை தொடர்பிலும் ஆணைக்குழுவுக்கு பல தொலைப்பேசி அழைப்புகள் கிடைக் கப்பெற்றதன் பேரில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அவரது அலுவலக கையடக்க தொலைபேசியினுடாக கடந்த 07.09.2016 அன்று பி;ப 12.15, 02.58 மற்றும் மாலை 06.02 மணியளவில் பல அறிவுறுத் தல்கள் வழங்கியும் உரிய நடவடிக்கைகள் எடுக்காமை.
®கடந்த 07.09.2016 அன்று மாலை 08.45 அள வில் சுன்னாகம் பொலிஸ் நிலைய தொலைப்பேசிக்கு அழைத்தன்பேரில் கடமையிலிருந்த திசாநாயக்க என்பவரு டன் தொடர்பு கொண்டு இரவு வேளையிலும் போராட்டத்தில் ஈடு பட்ட மாணவிகளின் பாது காப்பு தொடர் பிலும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் களின் பிரசன்னம் தொடர்பிலும் கலந் துரையாடப்பட்டது.
இருப்பினும் அங்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிரசன்னம் இல்லாமை தொடர்பில் மாண விகளால் ஆணைக்குழுவுக்கு அறியத்தரப்பட்டது.
®எனவே மேற் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் 1996 ஆம் ஆண்டு 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத் தின் 18ன் பிரகாரம் தேவைப்படுவதால் தாங்கள் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைள் மேற் கொண்டு அது தொடர்பான தங்களது அறிக்கையை மிக விரைவாக எமக்கு சமர்ப்பிக் கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் காரியாலயம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.