யாழ்.குடாநாட்டுக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையாழ்.பொதுநூலகத்தில் சந்தித்து பேசியிருந்தார்.
இதன்போது நூலகத்திற்கு வெளியேகாணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் ஐநா செயலாளருடனான சந்திப்பை நிறைவு செய்து கொண்டு காணாமல்போனவர்களின் உறவினர்களைச்சந்திக்க வந்த முதலமைச்சரிடமே காணாமல்போனவர்களின் உறவினர்கள் மேற்கண்டவாறுகேட்டுள்ளனர்.
இதன்போது உறவுகள் மேலும் கூறுகையில்,
காணாமல்போனவர்கள் அலுவலகம்கொழும்பில் வேண்டாம். எமக்கு கொழும்புக்கு செல்வதற்கு முடியாது. யாழ்ப்பாணத்தில்அமையுங்கள்.
மேலும் 7 வருடங்களாக நாங்கள் நல்ல சாப்பாடு சாப்பிடவில்லை. 7வருடங்களாக கணவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் பொட்டு வைத்துக் கொண்டு திரிகிறோம்.
ஒரு விமானம் தொலைந்தால் உடனே கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால்எங்கள் உறவுகளை கண்டுபிடிக்க நல்லாட்சி அரசாங்கத்தினால் முடியாதா? என கேள்வி எழுப்பினர்.
இதன்போது தமக்கு 6நிமிடங்களே கொடுக்கப்பட்டதாக கூறிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அந்தநேரத்திற்குள் சகல விடயங்கள் தொடர்பாகவும் தாம் பேசியுள்ளதாக கூறிய முதலமைச்சர்இந்த விடயத்தில் தம்மை கோபிப்பதில் பயனில்லை. உங்கள் ஆதங்கம் எனக்குவிளங்குகின்றது எனக் கூறினார்.