தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களால் யாழ். பிரதான பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் காலை 10 மணியளவில் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சிறைச்சாலைகளில் பல காமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசி யல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அவர்களின் உறவினர்களால் மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு கைதிகளின் விடுதலைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுத்தலைவர் ச.சஜீவன், மன்னார் பிரஜைகள் குழு, மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,மற்றும் சிறைவாசத்தின் பின் விடுதலையான அரசியல் கைதி கோமகன் என பலரும் கலந்து கொண்டனர்.