அங்குள்ள பொது மக்கள் இதனை எமது பதிவு செய்திக்கு தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் பாரிய காணி கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக தென்னமரவாடி கிராமத்தில் உள்ள பொது மக்களை வெளியேற்றிவிட்டு, அங்கு சிங்கள குடியேற்றத்தை மேற்கொள்ளம் நோக்கில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மாத ஆரம்பத்தில், அங்குள்ள பொது மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்பட்ட கூடாரங்களை இராணுவத்தின் அழித்திருந்தனர்.
இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் ஆகவுள்ள போதும், இன்னும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.