இன்று நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், வடமாகாணசபை அவைத் தலைவர் சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்களான பரச்சோதி மற்றும் சுகிர்தன் ஆகியோரே தங்களை தமிழ்த் தேசிய வாதிகள் என மீண்டும் தங்களைப் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு குரல் கொடும் முகமாக நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வுக்கு கடுமையான எதிர்ப்பதை உதயன் பத்திரிகை மூலமாகவும், ஏனைய பத்திரிகைளுக்கு வழங்கிய மறைமுக அச்சுறுத்தல்கள் அழுத்தங்கள் மற்றும் சில சந்திப்புக் மூலமாகவும் வெளியிட்டு வந்தமை இங்கே நினைவூட்டத்தக்கது.