மீண்டும் உயிர்த்தெழும் திலீபனின் நினைவிடம்
துளி நீரேனும் அருந்தாது உயிர்க்கொடை புரிந்த தியாகி திலீபனின் 29ஆவது நினைவு தினமான இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு நல்லூரில், அவரது இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபி அருகே நினைவுத் தீபங்களேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், பா.கஜதீபன் ஆகியோருடன் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு நினைவுத் தீபங்களேற்றி மலரஞ்சலி செய்துள்ளனர். கடந்த காலங்களில் அதிகார வர்க்கத்தின் அடக்கு முறைக்குள் ஒழுக்கப்பட்டு கவனிப்பாரற்று கிடந்த யாழ். நல்லூரில் அமைந்துள்ள சிதைக்கப்பட்ட திலீபனின் நினைவுத்தூபிக்கு இன்று காலை முதல் மாலை வரை தமிழ் அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தியதுடன், பொதுமக்கள் பலரும் தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தியவண்ணமுள்ளனர்.
Related Post:
Add Comments