தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களை நந்திக்கடலுக்கு இழுத்துச் சென்றதாகவும், மீண்டுமொரு தடவை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் தமிழ் மக்களை நந்திக்கடலுக்கு இழுத்துச் செல்கிறார் எனவும் ஜாதிக கெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.
ஜாதிக கெல உறுமயவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் பேச்சாளராரன நிசாந்த வர்ணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியின்போது தமிழர்களின் உரிமைகள் தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமை தொடர்பில் தான் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதனைக் குழப்பும் செயற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும், அரசாங்கம் இந்த விடயத்தில் பொறுப்பற்ற விதத்தில் செயற்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.