யாழ்.கட்டளைத் தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய அரச அதிபரால் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த கடிதம் தொடர்பில், இன்றைய வட மாகாண சபை அமர்வில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
காணி விடுவிப்பு தொடர்பில் மாகாண முதலமைச்சருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடியே தீர்மானங்களை எடுக்க வேண்டுமென தெரிவித்த சர்வேஸ்வரன், இராணுவத்திற்கு இது தொடர்பில் எவ்வித அதிகாரமும் இல்லையென இதன்போது சுட்டிக்காட்டினார்.