உயிர் தியாகம் செய்த மாவீரர்களுக்கு இன்று கிளிநொச்சியில் ஈகை சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
முதலாவது சுடர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தமிழர் தாயகம் தயார் நிலையில்…
கிளிநொச்சி, முழங்காவில் ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த இடங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றுவதற்காக மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், மற்றும் பொது மக்கள் என நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மாலை 06.05 மணியளவில் ஈகை சுடர் ஏற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்திருப்பதை அவதானிக்க கூடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக மாவீரர் தின நிகழ்வுகளை மாவீரர் துயிலும் இல்லங்களில் நடைபெறுவது இதுவே முதற்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.