
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இன்று தழிமீழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகத்தில் இன்று காலை அவர் மாவீரர்களுக்கு தீபமேற்றி மரலஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர் கலந்துகொண்ட நிலையில், உயிர்நீத்த மாவீர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு நல்லூர் ஆலயம் மற்றும் ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் புலனாய்வாளர்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ள நிலையிலும், வட மாகாண சபை உறுப்பினர்கள் தமிமீழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.