தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் இன்று கிளிநொச்சியில் மக்கள் சந்திப்பொன்றை நடத்தினர். இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டதன் நோக்கம் குறித்தும், தற்போதைய அரசியல் நிலமைகள் குறித்தும் மக்களுக்கு தெளிவுபடுத்தினர். இதன்போது கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்- ஜனநாயக ரீதியாக தமது தரப்பு நியாயத்தை கூறி மக்கள் அணி திரள தயாராகவுள்ளனரோ அங்கே அரசியல் ரீதியாக அழுத்தத்தை பிரயோகிக்க முடியும். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மிகவும் மோசமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். உரிமை போராட்டத்திற்கு துரோகமிழைப்பவர்களை தடுக்க வேண்டும் என்ற உணர்வோடுதான் தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்த எழுக தமிழ் பேரணியில் மிகப்பெரியளவில் மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மீண்டும் ஒரு எழுக தமிழ் நடக்கக்கூடாது என்பதில் திட்டமிட்ட ரீதியில் பல தரப்புக்கள் செயற்பட்டு வருவதுடன், இந்தக் கருத்துக்களால் தமிழ்மக்கள் பேரவையில்கூட அழுத்தங்கள் உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். |
இன்னொரு எழுக தமிழ் பேரணியை நடத்தாமல் தடுப்பதற்கு தமிழ் மக்கள் பேரவைக்குள்ளேயும் அழுத்தம்! - கஜேந்திரகுமார்
Related Post:
Add Comments